- Advertisement 3-
Homeவிளையாட்டுபவுலிங் போட வந்ததும் கூடவே வந்த பிரச்சனை.. 6 மேட்ச் தொடர்ந்து ஜெயிச்சதே சந்தோஷம்.. சோகத்தில்...

பவுலிங் போட வந்ததும் கூடவே வந்த பிரச்சனை.. 6 மேட்ச் தொடர்ந்து ஜெயிச்சதே சந்தோஷம்.. சோகத்தில் பாஃப்

- Advertisement 1-

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதுவதற்கு முன்பாக இந்த போட்டியை குறித்து பல்வேறு கணிப்புகள் இருந்து வந்தது. ஒரு பக்கம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மே மாதம் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த மாதம் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

அப்படி இருக்கும் சூழலில் இந்த இரு அணிகள் மோத உள்ளதால் இந்த போட்டி நிச்சயம் விறுவிறுப்பு நிறைந்து தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதனை மெய்யாக்கும் வகையில் இந்த போட்டி அமைந்திருந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, 172 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி முதல் 10 ஓவர்களில் சிறப்பாக ஆடினாலும் ஒரு சில விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து போனது.

இதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த ராஜஸ்தான் வெற்றியை நெருங்கும் சமயத்திலும் சில விக்கெட்டுகளை இழந்து தவித்தனர். அவர்களை கரை தேற்றிய ரியான் பராக் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாக, ஆர்சிபிக்கும் திடீரென வெற்றி வாய்ப்பு உருவானது. ஆனாலும் ரோமன் போவல் 19-வது ஓவரில் இரண்டு ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.

இந்த வெற்றியை பெற்றதுடன் மட்டும் இல்லாமல், ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் 2 போட்டியில் மார்ச் 24 ஆம் தேதியன்று மோதவுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால் அதே வேளையில் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதை ஏதோ ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது போல கொண்டாடிய அந்த அணியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே தற்போது மிஞ்சி உள்ளது.

- Advertisement 2-

இறுதி போட்டிக்கு முன்னேறுவார்கள் என எதிர்பார்த்த ஆர்சிபி தற்போது தோல்வியடைந்து ஒரே ஒரு பிளே ஆப் போட்டியுடன் வெளியேறி உள்ளது. இந்த தோல்விக்கு பின் பேசியிருந்த ஆர்சிபி கேப்டன் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ், “நாங்கள் பந்து வீசும் போது பனி அதிகமாக வந்ததால் பேட்டிங்கில் ரன்கள் குறைவாக அடித்து விட்டதை உணர்ந்தோம். இன்னும் 20 ரன்கள் அடித்திருந்தால் நல்ல ஸ்கோராக இருந்திருக்கும்.

ஆனால் அதே வேளையில், எங்களின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக போராடிப் பார்த்தனர். இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதி இருக்கும்போது 180 அடித்தால் கூட வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்து கொண்டோம். இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் தொடரை இழக்கும் தருவாயில் இருந்து ஆறு போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று மீண்டு வந்ததே பெரிய விஷயமாக இந்த சீசனில் பார்க்கிறோம். ஆனால் இந்த இரவு எங்களுக்கானதாக அந்த பேட்டிங்கில் அமையவில்லை” என கூறியுள்ளார்.

சற்று முன்