- Advertisement 3-
Homeவிளையாட்டுகத்துகிட்ட மொத்த வித்தையும்.. சிஎஸ்கேவை கவுக்க ஆர்சிபியின் பாப் போட்ட வியூகம்..

கத்துகிட்ட மொத்த வித்தையும்.. சிஎஸ்கேவை கவுக்க ஆர்சிபியின் பாப் போட்ட வியூகம்..

- Advertisement 1-

ஐபிஎல் தொடரில் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருப்பவர் தென் ஆப்பிரிக்க அணி வீரர் பாப் டு பிளெஸ்ஸிஸ். தற்போது 39 வயதாகும் பாப், சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டாலும், டி 20 லீக் தொடர்களில் சிறப்பாக ஆடி வருகிறார். அப்படி இருக்கையில், இந்த முறை ஆர்சிபி அணியை அவர் எப்படி வழிநடத்தப் போகிறார் என்பதை அறியவும் அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த ஆவலாக உள்ளனர்.

அது மட்டுமில்லாமல், கடந்த 16 ஐபிஎல் சீசன்களில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத அணியாக இருக்கும் பெங்களூர் அணி, இந்த முறை பாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையில் மிகச் சிறப்பாக அடி கோப்பையை கைப்பற்றி பெருமையை சேர்க்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் இத்தனை நாட்களாக தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனத்திற்கு 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர், ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் தொடராக இருக்க வேண்டும் என்பதும் அவர்களின் விருப்பமாக உள்ளது.

ஆனால் ஆர்சிபி அணியில் பாப் டு பிளெஸ்ஸிஸ் இணைந்து ஆடுவதற்கு முன்பாக, சுமார் பத்து ஆண்டுகளாக சென்னை அணியில் அவர் தோனியின் தலைமையின் கீழ் ஆடி வந்தார் என்பது தான் அவரது ஐபிஎல் பயணத்தின் சிறப்பான விஷயம். தொடக்க வீரராக ஏராளமான போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ள ஃபாப் டு பிளெஸ்ஸிஸ், ஆர்சிபி அணியின் கேப்டனாக தோனி ஸ்டைலில் தான் தலைமை தாங்கி வருவதாக பலமுறை குறிப்பிட்டு இருந்தார்.

அப்படி ஒரு நிலையில் தற்போது 17 வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் ஃபாப் டு பிளஸ்ஸிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மார்ச் 22 ஆம் தேதியன்று சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றது. இரு அணிகளிலுமே பலம் வாய்ந்த வீரர்கள் அதிகம் இருப்பதால் இந்த ஐபிஎல் சீசனின் தொடக்கமே அமர்க்களமாக அமைய உள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

- Advertisement 2-

முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையும் சமீபத்தில் பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதல் போட்டி சென்னை அணிக்கு எதிராக நடைபெற உள்ளதை அறிந்ததும் பாப் டு பிளெஸ்ஸிஸ் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்று வருகிறது.

முதல் போட்டி பற்றி ஆர்சிபியின் பதிவை பகிர்ந்த டு பிளெஸ்ஸிஸ், “என்ன மாதிரியான ஒரு முதல் போட்டி. இது அற்புதமாக இருக்க போகிறது” என வியப்புடன் குறிப்பிட்டுள்ளார். இன்றும் சென்னை அணி டு பிளெஸ்ஸிஸிற்கு பிடித்தமான அணியாக உள்ளதற்கு இந்த ஸ்டோரியே ஒரு உதாரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்