- Advertisement 3-
Homeவிளையாட்டுதோனி வந்ததும் டென்ஷன் ஆயிட்டேன்.. கடைசி ஓவரில் யாஷிடம் சொன்ன வார்த்தை.. ரகசியம் உடைத்த பாஃப்

தோனி வந்ததும் டென்ஷன் ஆயிட்டேன்.. கடைசி ஓவரில் யாஷிடம் சொன்ன வார்த்தை.. ரகசியம் உடைத்த பாஃப்

- Advertisement 1-

ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாது என அவர்களின் முதல் பாதி லீக் போட்டிகளில் ஏறக்குறைய ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கூட நினைத்து விட்டார்கள். ஆனால், எங்களின் வேலை இன்னும் முடியவில்லை என அசத்தலான கம்பேக்கை கொடுத்து அசத்தி உள்ளது ஆர்சிபி அணி. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழக்கும் கட்டத்தில் இருந்து மீண்டு வந்து கோப்பையை கைப்பற்றிய தொடர்கள் உண்டு.

அந்த வகையிலான ஒரு மிரட்டல் கம்பேக்கை கொடுத்திருந்த ஆர்சிபி, தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தி இருந்தது. இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தங்களின் கடைசி லீக் போட்டியில் மோதி இருந்தது ஆர்சிபி. இதில் வெற்றி பெறுவது முக்கியம் என்பதை தாண்டி, தாங்கள் அடிக்கும் ரன்னில் இருந்து 18 ரன்கள் குறைவாக சிஎஸ்கேவை கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் முக்கியமாக இருந்தது.

அப்படி இருக்கையில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, 20 ஓவர்களில் 218 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணி, 201 ரன்களை எடுத்தாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற சூழலில், ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரச்சின் ரவீந்திரா 50 ரன்கள் கடந்து துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாக, மற்ற எந்த வீரர்களும் ரன் சேர்க்க முடியாமல் திணறினர்.

இதனால், 15 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுக்க, போட்டியும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருந்தது. ஆனால், 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கேவால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்று யாருமே எதிர்பாராத கம்பேக்கை கொடுத்து அசத்தி உள்ளது ஆர்சிபி.

- Advertisement 2-

இந்த அதிரடி வெற்றிற்கு பின் பேசியிருந்த ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ், “இது நம்ப முடியாத வகையிலான ஆட்டம். சொந்த மைதானத்தில் வெற்றியுடன் இந்த சீசனை முடிப்பது அற்புதமாக இருந்தது. நான் ஆடிய டி 20 போட்டிகளிலேயே இது மிகவும் கடினமான பிட்ச். மழை முடிந்து வந்ததும் நானும் கோலியும் 140 முதல் 150 ரன்கள் வரை சேர்க்க வேண்டுமென நினைத்தோம்.

மழை முடிந்து வந்த போது ராஞ்சி டெஸ்ட்டின் 5 வது நாள் ஆடுவது போல இருந்தது என சாண்ட்னரிடம் கூறினேன். அப்படி இருந்தும் 200 ரன்களுக்கு மேல் அடித்ததை நம்ப முடியவில்லை. அதே போல, தோனி பேட்டிங் வந்ததும் இவர் பலமுறை இப்படி ஆடி வென்றிருக்கிறாரே என்ற பதற்றம் இருந்தது. ஆனால், எங்கள் பந்து வீச்சாளர்கள் ஈரப்பந்திலும் அபாரமாக செயல்பட்டனர். நான் எனது ஆட்டநாயகன் விருதை யாஷ் தயாளுக்கு சமர்ப்பிக்கிறேன்.

கடைசி ஓவருக்கு முன்பாக, பந்தின் வேகத்தை குறைப்பதே இந்த பிட்ச்சின் சிறந்த ஆப்ஷன் என்றும் உனது திறனை ரசித்து ஆடு என்றும் யாஷ் தயாளிடம் கூறினேன். முதல் பந்தில் யார்க்கர் வேலை செய்யாமல் போக, பின்னர் பந்தின் வேகத்தை அவர் குறைத்து கம்பேக் கொடுத்தார். இந்த ஐபிஎல் சீசனின் முதல் குறிக்கோளாக நாக் அவுட் ஸ்டேஜ் முன்னேறுவது தான் இருந்தது. அதற்கு தற்போது முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், இனியும் பயிற்சியை துரிதப்படுத்த வேண்டும்” என பாஃப் டு பிளெஸ்ஸிஸ் கூறினார்.

சற்று முன்