- Advertisement -

பவுலிங் ஃபார்ம் ஆக நாங்க செஞ்ச விஷயம்.. அது மட்டும் நடந்தா பிளே ஆப் தான்.. பாஃப் உறுதி..

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் ஐந்து அணிகள் பிளே ஆப்பிற்கு முன்னேற போராடி வரும் அதே வேளையில் அடுத்த இடத்தில் இருக்கும் ஐந்து அணிகள் ஒரு தோல்வியை பெற்றால் கூட பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் நிலை தான் உருவாகியுள்ளது. அதே வேளையில் முதல் 8 போட்டிகளில் ஆடி ஏழு போட்டிகளில் தோல்வி அடைந்து ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற பெங்களூரு அணி, பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் சூழலில் தான் இருந்தது.

ஆனால் அவர்கள் கடைசியாக ஆடி முடித்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளதால் டாப் இடங்களில் இருக்கும் அணிகளுக்கும் பிளே ஆப் வாய்ப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்னும் மீதம் இருக்கும் அனைத்து போட்டிகளை பெங்களூர் அணி வெற்றி பெற்றாலும் மற்ற போட்டிகளின் அடிப்படையில் தான் பெங்களூர் அணி பிளே ஆப்பிற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இதனால் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை அடித்து நொறுக்கி ரன்கள் சேர்த்து தங்களின் நெட் ரன் ரேட்டை உயர்த்தி பட்டையை கிளப்பி வரும் பெங்களூர் அணி, பஞ்சாப் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 241 ரன்களை சேர்த்தது. கோலி 92 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக சதமடிக்காமல் அவுட்டாக, அவருடன் இணைந்து ராஜத் படிதர் மற்றும் கிரீன் ஆகியோரும் நல்ல பங்களிப்பை அளித்திருந்தனர்.

தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 10 ஓவர்கள் முடிவில் 100 ரன்களைக் கடந்தாலும், அடுத்த சில ஓவர்களில் ஜிதேஷ் ஷர்மா மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரின் விக்கெட்டுகளையும் இழந்திருந்தனர். ஆனாலும், சாம் கரண் மற்றும் சஷாங்க் சிங் பஞ்சாபை மீட்கும் முயற்சியில் இறங்க அதுவும் நீண்ட நேரம் கை கொடுக்காமல் போக, 181 ரன்களில் ஆல் அவுட்டானாது பஞ்சாப் கிங்ஸ் அணி.

- Advertisement -

பஞ்சாப் அணி வெளியேற, மறுபுறம் ஆர்சிபி அணி பிளே ஆப் வாய்ப்பை இன்னும் பலப்படுத்தி உள்ளது. இந்த வெற்றிக்கு பின் பேசியிருந்த பாப் டு பிளெஸ்ஸிஸ் “இது மிகச் சிறந்த போட்டி. டாஸ் தோற்ற பிறகும் 240 ரன்கள் எடுத்தது நல்ல விஷயமாக அமைந்தது. எங்களின் ஆட்ட முறையும், ஆக்ரோஷமான ஆட்டமும் சிறப்பாக அமைந்திருந்தது.

ஒரே தவறை திரும்பத் திரும்ப செய்வது பற்றி நிறைய உரையாடல்களை நடத்தி இருந்தோம் அதேபோல எங்களின் ஆட்ட முறைகளை மாற்றி ஆக்ரோஷமான பேட்டிங்கையும் வெளிப்படுத்தி இருந்தோம். அதேபோல பந்து வீச்சிலும் பவர் பிளே ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் இருந்தோம். இதனால் அதைப்பற்றி பேசி தற்போது அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். ரன் அடிக்கவும் விக்கெட் எடுக்கவும் அணியில் வீரர்கள் இருக்கும்போது நீங்கள் அதற்காக நிச்சயம் போராடி வழிகளை உண்டாக்க வேண்டும்.

அணியில் தற்போது சில வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில், கடந்த சில போட்டிகளில் ஆடி வரும் ஆட்டத்தையே தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். அப்படி நாங்கள் செய்து விட்டால் நாங்கள் சிறந்த அணி என்பதையும் நிரூபித்து விடுவோம்” என பாஃப் கூறியுள்ளார்.

- Advertisement -

Recent Posts