- Advertisement 3-
Homeவிளையாட்டுபேட்டிங்ல செஞ்ச பெரிய தப்பு.. பவுலிங்ல ஒரு வேலை செஞ்சாங்க பாருங்க.. போட்டுடைத்த பாஃப்..

பேட்டிங்ல செஞ்ச பெரிய தப்பு.. பவுலிங்ல ஒரு வேலை செஞ்சாங்க பாருங்க.. போட்டுடைத்த பாஃப்..

- Advertisement 1-

நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடவே கூடாது என்ற நோக்கத்தில் தான் ஆர்சிபி அணி ஆடி வருவதாக தெரிகிறது. பாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு அணி, முதல் ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்த நிலையில், கோலி மற்றும் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தை மட்டும் தான் நம்பி ஒவ்வொரு போட்டியிலும் ஆடி வருகிறது.

பந்து வீச்சு அதல பாதாளத்தில் இருக்கும் நிலையில் ஒருவர் கூட விக்கெட்டை எடுக்கும் நோக்கில் பந்து வீசுவது போல தெரியவில்லை. ஏற்கனவே இந்த பந்து வீச்சாளர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்ட போதே பெங்களூரு அணி மீது அதிகமாக விமர்சனம் எழுந்திருந்த நிலையில் அது அவர்களின் ஆட்டத்திறன் மூலம் நிரூபணமும் ஆகி உள்ளது.

ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்ட பெங்களூர் அணி, ஏழாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர் கொண்டிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி இதே தொடரில் மும்பைக்கு எதிராக அடித்த தங்களின் அதிகபட்ச கோரை முறியடித்து 287 ரன்கள் எடுத்திருந்தது. மூன்று விக்கெட்டுகள் மட்டுமே இழந்திருந்த நிலையில் டிராவிஸ் ஹெட் சதமும், க்ளாஸன் அரை சதமும், கடைசியில் வந்த அப்துல் சமாத் பத்து பந்துகளில் 37 ரன்களும் எடுக்க இவர்களின் அதிரடியால் அந்த அணி 287 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை கொஞ்சம் கூட ஆர்சிபி ரசிகர்கள் எதிர்பாராத நிலையில் தொடர்ந்து ஆடிய பெங்களூர் அணியும் 5 ஓவர்களில் 70 ரன்களை தொட்டிருந்தது. ஆனாலும் அதன் பின்னர் கோலி 42 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 7 ரன் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகி இருந்தார். டு பிளெஸ்ஸிஸும் 62 ரன்களில் அவுட்டாக, தினேஷ் கார்த்திக் கடைசியில் அதிரடி காட்டினார்.

- Advertisement 2-

அவர் 35 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 83 ரன்கள் எடுத்து பட்டையை கிளப்ப, ஆர்சிபி அணி சேசிங்கில் 262 ரன்கள் எடுத்து வரலாறு படைத்துள்ளது. இந்த தோல்விக்கு பின் பேசி இருந்த ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ், “இது தான் முழுமையான டி 20 போட்டி. இந்த ஒரே போட்டியில் வந்த ரன்கள், மிக பெரிய உலக சாதனை. 270 ரன்கள் என்பதே இங்கு எளிதான இலக்கு தான். நாங்கள் சில விஷயங்கள் முயற்சி செய்து அது சரியாக வேலை செய்யவில்லை. இதுவே ஹைதராபாத் அணிக்கு தன்னம்பிக்கையாக அமைந்து விட்டது.

தற்போது எல்லாம் பேட்ஸ்மேன்களால் போட்டிகள் அனைத்தும் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அது மிகவும் கடினமாக உள்ளது. பேட்டிங் லைன் அப்பில் சில தவறுகளை செய்திருந்தோம். பவர் பிளே முடிந்ததும் ரன் குறைந்த அந்த இடம் தான் நாங்கள் சரி செய்ய வேண்டியுள்ளது. ஆனால், எங்கள் வீரர்கள் இன்று போராடிய விதம் பாராட்டுக்குரியது.

ஆனால், பந்து வீச்சை பொறுத்தவரையில் 30 – 40 ரன்கள் அதிகமாக கொடுத்து விட்டோம். மனநிலையின் அடிப்படையில் ஆடும் இந்த போட்டிக்கு உங்கள் மனதை சரியாக வைத்திருப்பது மிக முக்கியம். சில நேரங்களில் இங்கே தலை வெடிப்பது போன்றும் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்