டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 50 ஆவது லீக் போட்டியில் டூப்ளிசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
அதன்படி துவக்க வீரர்களாக களம் இறங்க விராட் கோலி (55) மற்றும் டூப்ளிசிஸ் (45) ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்து முதல் 10.3 ஓவர்களில் 82 ரன்களை சேர்த்து முதல் விக்கெட்டை பறி கொடுத்தனர். அதன் பின்னர் வந்த அடுத்த பந்தியிலேயே மேக்ஸ்வெல்லும் ஆட்டம் இழந்து வெளியேற பெங்களூரு அணியாயானது 82 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் நான்காவது வீரராக களமிறங்கிய மஹிபால் லாம்ரோர்டு 29 பந்துகளில் 54 ரன்கள் குவிக்க அந்த அணியானது 137 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 11 ரன்களும், அனுஜ் ராவத் 3 பந்துகளில் 8 ரன்களும் குவிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 181 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி 4.1 ஓவரில் வெறும் 23 ரன்களை மட்டுமே எடுத்திருந்த வேளையில் ஐந்தாவது ஓவரை வீசிய முகேஷ் குமாரின் பந்துவீச்சில் பெங்களூர் அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் மூன்று பவுண்டரிகளை பறக்கவிட்டு அணியின் முமென்ட்டத்தை மாற்றினார். அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இறுதியில் டூப்ளிசிஸ் 32 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 45 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறினார். இப்படி என்னதான் பெங்களூரு அணி 181 ரன்கள் அடித்திருந்தாலும் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியானது துவக்கத்திலிருந்தே மிகச் சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தி இறுதியில் 16.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 187 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.