- Advertisement 3-
Homeவிளையாட்டுவிதியை மீறி பார்க்க வந்த ரசிகருக்கு பின்னால் இருந்த வேதனை.. சகோதரன் போல தோனி கொடுத்த...

விதியை மீறி பார்க்க வந்த ரசிகருக்கு பின்னால் இருந்த வேதனை.. சகோதரன் போல தோனி கொடுத்த வாக்கு..

- Advertisement 1-

அந்த காலத்தில் எல்லாம் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது ஒரு அணி வெற்றி பெற்று விட்டால் மைதானத்தில் இருக்கும் அனைத்து ரசிகர்களும் நேராக உள்ளே நுழைந்து வீரர்களை கட்டித்தழுவி கொண்டாடத் தொடங்கி விடுவார்கள். மைதானம் முழுவதும் பச்சை நிறமே தெரியாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் அதன் பின்னர் மெல்ல மெல்ல சில கட்டுப்பாடுகளும் கிரிக்கெட் போட்டிகளில் வரத் தொடங்கியது.

இதன் காரணமாக பாதுகாவலர்கள் நிறைய பேர் இருக்க, மைதானத்திற்குள் ரசிகர்கள் நுழைவது என்பதே விதியை மீறிய செயலாக மாறிவிட்டது. ஆனாலும் விதிகளை தாண்டி சில ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய தான் செய்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி, தோனி, ரோஹித் ஷர்மா உள்ளிட்ட பலரையும் பார்ப்பதற்காக பாதுகாவலர்களையும் மீறி நேராக மைதானத்திற்குள் நுழைந்து தங்களுக்கு பிடித்தமான வீரர்களில் காலில் விழுவது, கட்டி அணைத்துக்கொள்வது என சில பரபரப்பான முயற்சிகளிலும் ரசிகர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அங்கு இருக்கும் காவலர்கள் பலரும் வந்து அந்த ரசிகர்களை அழைத்துக் கொண்டு வெளியே செல்வதுடன் இது ஒரு நிகழ்வாகவே நடந்து வந்தது. அப்படி இருக்கையில் தான் தோனியை குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது சிஎஸ்கே ரசிகர் நேரடியாக வந்து அகமதாபாத் மைதானத்தில் கட்டித்தழுவ முயன்று அவரது காலில் விழுந்து வணங்கி இருந்தார்.

அந்த சமயத்தில் தோனி மற்றும் அந்த ரசிகரும் ஏதோ பேசிக் கொண்டிருக்க, இது தொடர்பான வீடியோவும் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அந்த சமயத்தில் தோனியுடன் தன்னுடன் என்ன பேசினார் என்பது பற்றி அந்த ரசிகரே தற்போது சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

“நான் தோனியை அருகில் பார்த்ததும் மிக உற்சாகத்தில் அவரை ஓடிப் பின் தொடர்ந்தேன். ‘நான் இங்கே போட்டியை ரசிப்பதற்காக தான் வந்துள்ளேன்’ என தோனி என்னிடம் கூறியிருந்தார். அவரைப் பார்த்த உற்சாகத்தில் நான் அவரது பாதத்தில் தொட்டு வணங்கியதுடன் எனக்கு கண்ணீரும் வந்து விட்டது. அப்போது தோனி என்னிடம், ‘ஏன் இந்த அளவுக்கு அதிகமாக மூச்சு வாங்குகிறீர்கள்’ என என்னிடம் கேட்டார். அப்போது எனக்கு மூச்சு விடுவதில் நிறைய பிரச்சனை மூக்கில் இருப்பதாக அவரிடம் கூறினேன்.

அப்போது தோனி, ‘நான் உங்களது அறுவை சிகிச்சைக்கான செலவை பார்த்துக் கொள்கிறேன். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நிச்சயம் உங்களுக்கு எதுவும் நடக்க விடமாட்டேன்’ என கூறினார். செக்யூரிட்டி அனைவரும் வந்து என்னை பிடித்ததும் பத்திரமாக வெளியே என்னை விடும்படிதான் அவர்களிடம் தோனி கூறினார்” என அந்த ரசிகர் தற்போது கூறியுள்ளார். தோனியின் பெரிய மனசை நினைத்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.

சற்று முன்