- Advertisement 3-
Homeவிளையாட்டுமைதானத்துக்குள் ஓடிவந்து ரசிகர் செய்த செயலால் ஸ்தம்பித்து போன ருத்துராஜ் - தோனியின் சிஷ்யன்னா சும்மாவா...

மைதானத்துக்குள் ஓடிவந்து ரசிகர் செய்த செயலால் ஸ்தம்பித்து போன ருத்துராஜ் – தோனியின் சிஷ்யன்னா சும்மாவா என சிலிர்க்கும் சிஎஸ்கே ஃபேன்ஸ்

- Advertisement 1-

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணிக்காக கடந்த சில சீசன்களாக அணிக்காக விளையாடி வருகிறார். தோனியின் தலைமையில் மெருகேற்றப்பட்டு இப்போது ஒரு சிறப்பான தொடக்க ஆட்டக்காரராக வலம் வருகிறார் ருத்துராஜ்.

சிஎஸ்கே அணிக்கு வந்து இரண்டு முறை கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்துள்ளார் ருத்துராஜ். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அவர் 590 ரன்கள் சேர்த்தார். சிஎஸ்கே அணி கோப்பையை வென்றதில் ருத்துராஜுக்கும் முக்கிய பங்கு உண்டு. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய அவர் இறுதிப் போட்டியிலும் கணிசமாக ரன்களைக் குவித்து வருகிறார்.

சிஎஸ்கே அணியில் இவரின் வளர்ச்சி மேல்நோக்கி நேர்கோடாக சென்று கொண்டிருக்கிறது. தோனி ஓய்வுக்குப் பிறகு இவர்தான் சிஎஸ்கேவை வழிநடத்துவார் என்று சொல்லப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளார். 26 வயதாகும் ருத்துராஜ் இப்போது தலைமையேற்றால் நீண்ட நாட்களுக்கு அவரால் அணியை வழிநடத்த முடியும் என சொல்லப்படுகிறது.

விரைவில் இந்திய அணியிலும் ருத்துராஜுக்கு வாசல்கள் திறக்கும் என கணிக்கப்படும் நிலையில் இப்போது மகாராஷ்டிரா பிரிமியர் லீக் தொடரில் அவர் விளையாடி வருகிறார். அந்த தொடரில் புனேரி பாப்பா எனும் அணிக்கு தலைமையேற்று சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் நடந்த ஒரு போட்டியில் பேட்டிங் செய்யும் போது ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் ஓடிவந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement 2-

மைதானத்துக்குள் அத்துமீறி ஓடிவந்த அந்த நபர், ருத்துராஜின் கால்களில் விழுந்தார். இதை சற்றும் எதிர்பாராத ருத்துராஜ் அதிர்ச்சியில் உறைந்தார். இந்த சம்பவத்தால் சில நிமிடங்கள் போட்டி தடைபட்டது. பின்னர் அந்த ரசிகரை வெளியேற்றியதும் போட்டி தொடங்கி நடைபெற்றது.

இதையும் படிக்கலாமே: 2 ஆண்டுகள் கழித்து அணியில் வந்தவருக்கு அபராதம் விதித்து ஆப் செய்த ஐசிசி. இது என்னப்பா இவருக்கு வந்த சோதனை.

வழக்கமாக சச்சின், தோனி, கோலி, சேவாக் போன்ற இந்திய ஜாம்பவான் வீரர்கள் விளையாடும் சதமடித்தாலோ அல்லது முக்கியமான சாதனைகளை முறியடித்தாலோ ரசிகர்கள் பெவிலியனில் இருந்து ரசிகர்கள் ஓடிவருவது வாடிக்கை. ஆனால் இன்னும் சர்வதேச அணிக்கே செல்லாத ஒரு இளம் வீரருக்கு இப்படி நடப்பது இதுவே முதல்முறை. இதைப் பார்த்து பூரிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள் “தோனியின் சிஷ்யன் என்பதால்தான் இந்த மரியாதை” என கூறி வருகின்றனர்.

சற்று முன்