- Advertisement -
Homeவிளையாட்டுரோஹித்த திரும்ப கேப்டன் ஆக்குங்க.. கூட்டத்தில் கத்திய ரசிகர்.. கூலாக மும்பை உரிமையாளர் சொன்ன பதில்..

ரோஹித்த திரும்ப கேப்டன் ஆக்குங்க.. கூட்டத்தில் கத்திய ரசிகர்.. கூலாக மும்பை உரிமையாளர் சொன்ன பதில்..

- Advertisement-

ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த சில தினங்களாக பல்வேறு வதந்திகள் மற்றும் விமர்சனங்கள் உருவாகி வந்த வண்ணம் உள்ளது. ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய மும்பை அணி, அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது.

குஜராத் அணிக்காக இரண்டு ஆண்டுகள் ஆடிய ஹர்திக், அங்கு இருக்கும் போது மும்பை அணியை ஒரு தடவை விமர்சனம் செய்தது ரசிகர்களை அதிகம் கொந்தளிக்க வைத்திருந்தது. அப்படி இருக்கையில், அவர் மீண்டும் மும்பை அணில் இணைந்ததுடன் கேப்டன் பதவியையும் பெற்றுள்ளதால் ரசிகர்கள் இன்னும் கோபத்தில் உள்ளனர்.

இதற்கிடையில் மும்பை அணியின் முடிவு காரணமாக நிச்சயம் ரோஹித் சர்மா வேறு அணியில் டிரேடிங் முறையில் சென்று விடுவார் என்றும் பல்வேறு தகவல்கள் பரவி வந்தது. ஆனால் ஹர்திக்கை கேப்டனாக்கும் முடிவு ரோஹித்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்டது என்றும் அவர் தலைமையில் ஆடுவதற்கு ரோஹித் தயாராக உள்ளதாகவும் உறுதியான சில தகவல்களும் வெளியான வண்ணம் இருந்தது.

அதே போல, மும்பை அணி தரப்பில் ரோகித் சர்மா வேறு எந்த அணிக்காகவும் ஆடப்போவதில்லை என்றும் அவர் தொடர்ந்து மும்பை அணிக்காக பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த உள்ளார் என்றும் சில நிர்வாகிகளும் கூறியிருந்தனர். அப்படி இருக்கையில் ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் ஐபிஎல் ஏலத்துக்கு மத்தியில் சொன்ன வார்த்தையும் அதற்கு மும்பை அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி தெரிவித்த கருத்தும் தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

- Advertisement-

ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாக நடந்து வந்த சமயத்திற்கு இடையில் ரசிகர் ஒருவர் ரோஹித்தை மீண்டும் கேப்டனாக்க வேண்டும் என ஆகாஷ் அம்பானியை பார்த்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு பதில் சொன்ன ஆகாஷ் அம்பானி, ‘கவலைப்படாதீர்கள், ரோஹித் கண்டிப்பாக பேட்டிங் செய்வார்’ என தெரிவித்தார்.

மும்பை அணியின் உரிமையாளரே இந்த வார்த்தையை கூறியுள்ளதால் நிச்சயம் ரோகித் வேறு அணிக்கு ஆடமாட்டார் என்றும் அவர் மும்பை அணியில் தொடர்ந்து பேட்டிங் ஆடுவார் என்பதும் உறுதியாகி உள்ளது. அதே வேளையில், அவர் மும்பை அணியின் கேப்டனாக இல்லாத சூழலில் ஐபிஎல் தொடரில் ஹர்திக்குடன் இணைந்து ஒன்றாக ஆடினாலே ரசிகர்கள் முன்பு போல் மும்பை அணிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்