- Advertisement 3-
Homeவிளையாட்டுஹர்திக்கிற்கு எதிராக கத்திய ரசிகர்கள் கூட்டம்.. ஒரே சைகையில் ஆஃப் செய்த ரோஹித் ஷர்மா.. மனுஷன்...

ஹர்திக்கிற்கு எதிராக கத்திய ரசிகர்கள் கூட்டம்.. ஒரே சைகையில் ஆஃப் செய்த ரோஹித் ஷர்மா.. மனுஷன் வேற லெவல்..

- Advertisement-

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக உருவான அணி தான் குஜராத் டைட்டன்ஸ். இந்த அணியின் கேப்டனாக அப்போது மும்பையில் இருந்து டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அணிக்காக அவர் ஆடிய முதல் மூன்று போட்டிகளையும் வென்று கொடுத்திருந்தார்.

இரண்டு சீசன் குஜராத் அணிக்காக ஆடி ஒரு முறை கோப்பையை கைப்பற்றி கொடுத்துவிட்டு மீண்டும் மும்பை அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியா இங்கேயும் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் ஆடிய மூன்று போட்டியிலும் அந்த அணி தோல்வி அடைந்துள்ளது.

- Advertisements -

குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் என மூன்று அணிகளுக்கு எதிராக தொடர் தோல்விகளை சந்தித்துள்ளதால் ரசிகர்களும் துவண்டு போயுள்ளனர். ஐபிஎல் தொடரில் ஆபத்தான அணியாக பார்க்கப்பட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் இப்படி ஒரு தடுமாற்றத்தை கண்டு வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக இன்னொரு பக்கம் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆனது அந்த அணிக்கு தலைவலியாக மாறி உள்ளது. எந்த மைதானத்தில் போட்டி நடந்தாலும் ஹர்திக் பாண்டியா டாஸ் போட வரும் சமயத்தில் ரோஹித், ரோஹித் என கத்தி அவருக்கு நெருக்கடியையும், மன அழுத்தத்தையும் கொடுப்பதுடன் போட்டி முழுக்க இதையே ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர்.

- Advertisement-

இதனால் ஹர்திக் மீதான அழுத்தமும் அதிகமாகி உள்ளதால் அவர் இனிவரும் போட்டிகளில் இதை எப்படி சமாளிக்க போகிறார் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. இதன் காரணமாக தான் தொடர் தோல்வியிலும் மும்பை அணி தடுமாறி வருவதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். மற்ற மைதானங்களை விட மும்பை வான்கடே மைதானத்தில் தான் ஹர்திக்கிற்கு எதிரான குரல் அதிகமாக இருந்தது.

போட்டி ஆரம்பமாக பல மணி நேரத்துக்கு முன்பாகவே மைதானத்திற்கு வருகை தந்திருந்த ரசிகர்கள் ரோகித் ரோகித் என கத்தி கூச்சல் போட்டு ஆரவாரம் செய்தபடியே என்ட்ரி கொடுத்திருந்தனர். இதனை மும்பை வீரர்களும் கவனித்திருந்த நிலையில், போட்டி முழுக்க இதே நிலை தொடர்ந்ததால் அவர்கள் தோல்வியும் அடைந்தனர்.

இதிலிருந்து மும்பை அணி மீண்டு வர வேண்டுமென்றால் அவர்கள் ஹர்திக் விஷயத்தில் முக்கியமான முடிவை எடுத்து ரசிகர்களின் ஆதரவையும் பெற முயற்சி செய்ய வேண்டும். இதனிடையே, மும்பை ரசிகர்கள் ரோஹித், ரோஹித் என ஹர்திக்கிற்கு எதிராக கத்த, ஃபீல்டிங் நின்ற ரோஹித் செய்த விஷயம் அதிக கவனம் பெற்று வருகிறது.

தனது பெயரை சொல்லி ஹர்திக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்க, உடனே தனது கை மூலம் சைகை காட்டி ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தினார். இத்தனை நாள் அமைதியாக இருந்த ரோஹித், தற்போது இதற்கு ரியாக்ட் செய்துள்ள விஷயம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.

சற்று முன்