சில தினங்களுக்கு முன்னர் லக்னோவில் நடந்த லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி, இந்த சீசனின் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாக நடந்து முடிந்தது. போட்டி முடிந்துவிட்டாலும் இன்னும் அந்த போட்டி சம்மந்தமான சர்ச்சைகள் ஓயவில்லை. மிகவும் லோ ஸ்கோர் மேட்ச்சான இந்த போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கோலியும் கம்பீரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு ஆக்ரோஷமாக நடந்து கொண்டது தவறான ஒரு முன்னுதாரணமாக ரசிகர்கள் மத்தியில் பதிந்துவிட்டது. இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் பற்றி தேசிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி கோலியிடம் கம்பீர் ‘நீ என் வீரர்களிடம் என்ன சொன்னாய்?’ எனக் கேட்டுள்ளார். அதற்கு கோலி “உங்களிடம் நான் எதுவும் பேசாத போது நீங்கள் ஏன் குறுக்கே வருகிறீர்கள்” எனக் கேட்டுள்ளார்.
அதற்குக் கம்பீர் “நீ என் அணி வீரர்களை பற்றி அவதூறாக பேசியுள்ளாய். இந்த அணி என் குடும்பத்தைப் போன்றது.” எனக் கூறவே, பதிலுக்கு கோலி துடுக்காக “அப்படி என்றால் உங்கள் குடும்பத்தை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு கம்பீர் “நீ எனக்குக் கற்றுக் கொடுக்கிறாயா?” எனக் கேட்டதாக சொல்லப்படுகிறது. இருவரின் இந்த மோதல்களை முன்னாள் வீரர்கள் பலர் கண்டித்துள்ளனர். போட்டி முடிந்து சில நாட்கள் ஆனபின்னரும் இன்னும் அந்த மோதலைப் பற்றி பலரும் மறக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது லக்னோ அணியின் ஆலோசகர், கேலரியில் நடந்து வரும் போது சில குறும்பான ரசிகர்கள் அவரை சீண்டுவதற்காக ‘கோலி கோலி’ எனக் கோஷமெழுப்ப, இதனால் திடுக்கிட்ட கம்பீர் ஒரு சில வினாடிகள் அவர்களை உற்றுப் பார்த்துவிட்டு திரும்பி வேகமாக நடக்க ஆரம்பித்தார். இது சம்மந்தமான வீடியோ துணுக்குகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. கோலி கம்பீர் மோதலில் பெரும்பாலான ரசிகர்கள் கோலிக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
This is brutal ragging from the crowd. 😂 #LSGvsCSK #ViratKohli #GautamGambhir pic.twitter.com/q13QRBdKDS
— Animal @Dec 1🪓 (@EddyTweetzBro) May 4, 2023