- Advertisement 3-
Homeவிளையாட்டுசுயநலவாதி ஹர்திக் பாண்டியா.. திலக் வர்மா, சஞ்சு சாம்சன் யாரும் முன்னுக்கு வரக்கூடாது... ஜெயிச்சும் ரசிகர்களிடம்...

சுயநலவாதி ஹர்திக் பாண்டியா.. திலக் வர்மா, சஞ்சு சாம்சன் யாரும் முன்னுக்கு வரக்கூடாது… ஜெயிச்சும் ரசிகர்களிடம் படு கேவலமான பெயர்.. சுயநலம் இருக்கலாம் அதுக்காக இப்படியா

- Advertisement 1-

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சேஸிங்கின் போது சூர்யகுமார் யாதவ் ஆடிய தரமான ஆட்டம் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அதேபோல் சூர்யகுமார் யாதவிற்கு கம்பெனி கொடுத்த திலக் வர்மாவும் சிறப்பாக ஆடி 49 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.

இந்திய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், திலக் வர்மா 49 ரன்களுடன் எதிர்முனையில் நின்றிருந்தார். அப்போது பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா சிக்சர் அடித்து இந்திய ஆணியை வெற்றிபெற வைத்தார். இதன் மூலம் இளம் வீரர் திலக் வர்மாவால் அரைசதத்தை எட்ட முடியாமல் போனது.

கடைசி ஓவரில் இப்படியான செயலை செய்திருந்தால் கூட சரி. ஆனால் 17வது ஓவரில் இந்திய அணியின் வெற்றி உறுதியான நிலையில், இளம் வீரர் திலக் வர்மாவிடம் ஸ்ட்ரைக் கொடுத்திருக்க வேண்டும் என்று ரசிகர்களால் விமர்சிக்கப்படுகிறது. அதேபோல் வழக்கமாக 6வது இடத்தில் களமிறங்கும் ஹர்திக் பாண்டியா, நேற்று 5வது இடத்தில் களமிறங்கினார்.

இதனால் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய முடியாமல் போனது. கடினமான நேரங்களில் சஞ்சு சாம்சனை களமிறக்கிவிட்டு, சாவகாசமாக 6வது இடத்தில் ஹர்திக் பாண்டியா களமிறங்குவார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்கும் போது இந்தியாவின் வெற்றி உறுதி என்று பார்க்கப்பட்டது.

- Advertisement 2-

தோனி ஆடியதை போல் ஃபினிஷர் ரோலில் களமிறங்க வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா ஆசைப்பட்டு களமிறங்கினார் என்று வைத்துக் கொண்டாலும், திலக் வர்மாவை அரைசதம் அடிக்கவிடாமல் பந்தை சிக்சருக்கு அனுப்பியது ரசிகர்களிடையே அவருக்கு சுயநலவாதி என்ற பெயரை சம்பாதித்து கொடுத்துள்ளது.

இதனால் சமூக வலைதளங்களில் இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் ஆவேசமாக விமர்சித்து வருகின்றனர். இளம் வீரர்கள் இதுபோன்ற மைல்கல்லை எட்டும் போது மிகப்பெரிய அளவிற்கு கான்ஃபிடன்ஸ் பெறுவார்கள். அதனை தடுக்கவே ஹர்திக் இப்படி செயல்படுவதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

சற்று முன்