- Advertisement 3-
Homeவிளையாட்டுஇதுக்கு அவங்களே ஆடி இருக்கலாம்.. சொதப்பிய சிஎஸ்கே வீரர்கள்.. ரோஹித் செய்தே தீர வேண்டிய மாற்றம்..

இதுக்கு அவங்களே ஆடி இருக்கலாம்.. சொதப்பிய சிஎஸ்கே வீரர்கள்.. ரோஹித் செய்தே தீர வேண்டிய மாற்றம்..

- Advertisement 1-

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி இருந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருந்தாலும் சில விஷயங்கள் இந்திய அணியில் சரியாக அமையாதது விமர்சனத்தை தான் சந்தித்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலககோப்பைத் தொடரின் ஒரு போட்டியில் மோதினாலே எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகமாக தான் இருக்கும்.

அந்த வகையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தார். அதன்படி ஆடிய இந்திய அணி ஆரம்பத்திலிருந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 1 ரன் அடித்து அவுட்டாகி இருந்த கோலி இந்த முறை நான்கு ரன்களில் நடையைக் கட்டினார்.

கேப்டன் ரோஹித்தும் 13 ரன்களில் அவுட்டாக, பின்னர் வந்த ரிஷப் பந்த் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஓரளவுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். ஆனால் இதன் பின்னால் வந்த வீரர்களால் அதனைத் தொடர முடியாமல் போனதால் இந்திய அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது.

அமெரிக்காவுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியடைந்த பாகிஸ்தான் இந்த இலக்கை எளிதாக எட்டி விடும் என நினைத்த நிலையில் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரன் சேர்க்கவே திணறி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் தான் எடுத்திருந்தது. பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த போதும் பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்துவீசி இந்தியாவின் வெற்றியையும் கடைசி ஓவர்களில் உறுதி செய்திருந்தனர்.

- Advertisement 2-

அயர்லாந்துக்கு எதிராக ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ரா, இந்த போட்டியிலும் நான்கு ஓவர்கள் பந்து வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி மீண்டும் ஒருமுறை ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார். அப்படி இந்திய அணியும் மிகப்பெரிய கம்பேக் கொடுத்திருந்தாலும் இந்த போட்டியில் சில விஷயங்கள் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணியில் தேர்வாகி இருந்த ஷிவம் துபே, 9 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். பயிற்சி போட்டியிலும் சிறப்பாக ஆடாத ஷிவம் துபே, இனி வரும் போட்டிகளில் ரன் அடித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளார். இவரை போலவே சிஎஸ்கே அணியில் இடம்பிடித்து ஆடியிருந்த ரவீந்திர ஜடேஜா, முக்கியமான நேரத்தில் சொதப்ப, ரசிகர்கள் விமர்சனத்தையும் முன் வைத்து வருகின்றனர்.

ரிங்கு சிங் ஓரம்கட்டப்பட்டு ஷிவம் துபே இடம்பிடித்ததால் அவரே தேர்வாகி இருக்கலாம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதே போல தற்போதுள்ள அணியின் அடிப்படையில் ஷிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜாவை மாற்றி விட்டு சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

சற்று முன்