என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு? எங்களலாம் பாத்தா எப்படி தெரியுது? உ.கோ டிக்கெட் விற்பனை விவகாரத்தில் ஜெய் ஷா மீது பாயும் ரசிகர்கள்

- Advertisement -

ஐசிசி 50 ஓவர் ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த காலங்களில் இந்த உலகக் கோப்பை போட்டியானது இந்தியாவில் நடைபெற்று இருந்தாலும் அது முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறவில்லை. ஆனால் வரவிருக்கும் உலக கோப்பை முழுவதுமாக நமது மண்ணான இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பையில் உலகில் உள்ள டாப் 10 அணிகள் மோத உள்ளன.

இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள ஒவ்வொரு அணியும் தனது முதல் சுற்றில் அனைத்து அணியுடன் தலா ஒரு ஆட்டத்தில் மோத உள்ளன. அதில் டாப் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகின்றன. அரை இறுதியில் நடக்கும் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகளானது இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் நவம்பர் 19ஆம் தேதி விளையாடுகிறது. 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை வென்றது போல இந்த உலகக் கோப்பையையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்தத் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ முன்பு அறிவித்திருந்தது. இதில் குறிப்பிடப்படும் நிகழ்வாக பிசிசிஐ அந்தந்த போட்டிகள் நடக்கும் கிரிக்கெட் வாரியங்களுடன் எந்தவித ஆலோசனைகளில் ஈடுபடாமல் நேரடியாக இவர்களே மைதானங்களை தேர்வு செய்தது சில குழப்பங்களை ஏற்படுத்தியது. அதனால் சில ஆட்டங்களை மறு தேதிகளுக்கு மாற்ற நேரிட்டது. டிஜிட்டல் இந்தியா என்ற பிரச்சாரம் நாடு முழுவதும் முன்வைக்கப்படும் இந்த நிலையில் உலகக்கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக விற்காமல் மைதான கவுண்டர்களில் விற்கப்படும் என பிசிசிஐ அறிவித்தது ரசிகர்கள் இடம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது.

மேலும் ஐசிசியின் அறிவுறுத்தலின் படி கடைசி நேரத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக விற்கப்படும் என பிசிசிஐ கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிப்பை வெளியிட்டது. டிக்கெட்டுகள் வாங்க நினைக்கும் ரசிகர்கள் தங்களது பெயர்களை முன்பே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் 29ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கியது. முன்னதாக பெயர்களை பதிவு செய்த ரசிகர்கள் மூன்று மணி நேர முதல் 5 மணி நேரம் ஆன்லைன் கியூவில் கண்டிப்பாக காத்திருக்க வேண்டும் என்ற செய்தி அந்த இணையத்தில் தெரிவிக்கப்பட்டது. “‘புக்மை ஷோவில்” முன்னும் பின்னும் செல்லாமல் அந்த செயலியிலேயே 5 மணி நேரம் உட்கார்ந்து இருக்க வேண்டும் என கூறப்பட்டது ரசிகர்களுக்கு மிகவும் கடுப்பை உண்டாக்கியது.

அதிலும் சில ரசிகர்களுக்கு நான்கு மாதம் முதல் நான்கு வருடங்கள் வரை அந்த இணைய பக்கத்திலேயே காத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பு அந்த இணைய பக்கத்தில் காண்பித்தது ரசிகர்களுக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. இதனால் கோபத்தின் எல்லைக்குச் சென்ற ரசிகர்கள், டிக்கெட் விற்பனையில் நெறைய பித்தலாட்டம் நடக்கிறது. எல்லாமே ஊழல் மாயம் ஆகிறது என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்