- Advertisement -
Homeவிளையாட்டுஆஹா இது அது இல்ல. அப்போ அவ்ளோதானா! தோனியின் கடைசி ஒருநாள் போட்டில நடந்த மாதிரியே...

ஆஹா இது அது இல்ல. அப்போ அவ்ளோதானா! தோனியின் கடைசி ஒருநாள் போட்டில நடந்த மாதிரியே இந்த ஐபிஎல் பைனல்லயும் நடக்காதே. இது என்ன தேஜாவுவா என சகோமடையும் ரசிகர்கள்.

- Advertisement-

கோடிக்கணக்கான ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நேற்று நடக்க இருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி மழைக் காரணமாக இன்று (மே 29- திங்கள்) ரிஸர்வ் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முழுவதும் மழை பெய்ததால் ஓவர்கள் குறைத்தோ அல்லது சூப்பர் ஓவர் மட்டுமோ வீசி போட்டியின் முடிவை அறிவிக்க முடியாத அளவுக்கு சென்றது. அதனால் இன்று போட்டி ஒத்திவைகப்பட்டுள்ள நிலையில் இன்றும் மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் சாம்பியனாக அறிவிக்கப்படும்.

இந்நிலையில் தோனி ரசிகர்கள் ஐபிஎல் இறுதிப் போட்டி மாற்றி வைக்கப்பட்டது குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய சுவாரஸ்யமான சம்பவத்தைப் பற்றி பகிர்ந்துள்ளனர். இன்று நடக்க உள்ள ஐபிஎல் போட்டிக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டிக்கும் சுவாரஸ்யமான தொடர்பு ஒன்று உள்ளது.

தோனி 2019 ஆம் ஆண்டோடு சர்வதே போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டி 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நியுசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில்தான். அந்த போட்டி மழை காரணமாக முதல் நாள் முழுவதும் நடக்காமல் ரிஸர்வ் நாளுக்கு மாற்றி வைக்கப்பட்டது.

- Advertisement-

இந்நிலையில் ரிஸர்வ் நாளில் நடந்த சர்வதேச போட்டிதான் தோனியின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்ததை போல இன்று ரிசர்வ் நாளில் நடக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டிதான் தோனியின் கடைசி சர்வதேச போட்டி அல்லாத லீக் போட்டியாக இருக்கும் என சிலர் ஆருடம் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் சீசன் என பலரும் சொல்லி வருகின்றனர்.

41 வயதாகும் தோனி, தற்போது ஐபிஎல் விளையாடும் வீரர்களில் வயது மூத்த வீரராக உள்ளார். தோனி இதுவரை ஓய்வு குறித்து வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் அவரின் முழங்கால் வலி மற்றும் வயது ஆகியவை காரணமாக ரசிகர்கள் தாங்களாகவே இதுதான் அவரின் கடைசி ஐபிஎல் தொடர் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். பொறுத்திருந்து பார்த்தல் முடிவு தெரியும். அதுவரை காத்திருப்போம்.

சற்று முன்