- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர்களின் பிரம்மாண்ட பேரணிக்கு மத்தியில்.. வைரலாகும் முதல் டேட்டிங் பின்னணி..

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் டி20 உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ள நிலையில், இந்தியா வந்தடைந்த வீரர்களுக்கு உற்சாகமான வரவேற்பும் அளிக்கப்பட்டது மிக முக்கியமான ஒரு தருணமாகவும் மாறி உள்ளது. தோனி தலைமையில் 3 உலக கோப்பைகள் வென்று சாதனை புரிய, 13 ஆண்டுகள் உலக கோப்பை மோகம் மட்டும் ரசிகர்களை வாட்டிக் கொண்டே வந்தது.

அதற்கெல்லாம் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட 15 பேர் கொண்ட இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முற்றுப்புள்ளி வைத்து தென்னாப்பிரிக்க அணியை இறுதி போட்டியில் வீழ்த்தி வரலாறு படைத்திருந்தது.

- Advertisement -

அப்படி வென்ற இந்திய வீரர்கள் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்தடைந்திருந்தனர். முன்னதாக, இந்தியாவிற்காக வருவதற்கு முன்பாக ரோஹித் ஷர்மா மும்பை மண்ணில் வைத்து பிரம்மாண்ட பேரணி ஒன்று நடைபெற உள்ளதை தனது சமூக வலைத்தளம் மூலம் அறிவித்திருந்தார். இதன் காரணமாக, மும்பையை சுற்றி இருந்த ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் உருவாகி இருந்தது.

தொடர்ந்து, இந்தியா வந்தடைந்திருந்த இந்திய வீரர்கள் முதலில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றிருந்தனர். அங்கேயே சில மணி நேரம் கழித்த இந்திய வீரர்கள், பின்னர் மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து ரசிகர்கள் முன்னிலையில் பெரிய அளவில் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களையும் வெளியிட்டிருந்தனர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து, திறந்த வெளி பேருந்தில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த 15 வீரர்களும் வலம் வர, ரசிகர்கள் கூட்டம் அலைமோதி இருந்தது. இதனை விட இந்திய அணியின் வெற்றியை கொண்டாடித் தீர்க்க முடியாது என்ற அளவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்திருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தை இன்னும் ஆக்கிரமித்து கொண்டாடப்பட்டு வரும் சூழலில், இதற்கு மத்தியில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது பலர் மத்தியிலும் பேசு பொருளாகி உள்ளது.

யாஷி வர்மா என்ற பெண் ஒருவர், ஒரு ஆண் நண்பர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். இவர்கள் இருவருமே இந்திய கிரிக்கெட் வீரர்களின் பிரம்மாண்ட பேரணியில் கலந்து கொண்டனர். இது தொடர்பான பதிவில், “எனது டிண்டர் மேட்ச் விராட் கோலியிடம் இருந்து ஃப்ளையிங் கிஸ் பெற்றுத் தர உதவி இருந்தது. எனது முதல் சிறந்த டேட்டிங் இது” என உணர்ச்சிப் பூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களின் பிரம்மாண்ட பேரணிக்கு மத்தியில் இப்படி ஒரு முதல் டேட்டிங் செய்தி, பலரையும் லைக் போட வைத்துள்ளது.

- Advertisement -

Recent Posts