- Advertisement 3-
Homeவிளையாட்டுஐபிஎல் போட்டிய நீங்க ஆடாதீங்க.. உங்க Future இது கிடையாது .. ஆர்சிபி வீரரை எச்சரித்த...

ஐபிஎல் போட்டிய நீங்க ஆடாதீங்க.. உங்க Future இது கிடையாது .. ஆர்சிபி வீரரை எச்சரித்த முன்னாள் வீரர்..

- Advertisement-

உலகக்கோப்பை ஃபீவர் கடந்த மாதமே முடிவடைந்திருந்த சூழலில், தற்போது கிரிக்கெட் ரசிகர்களை பற்ற வைத்த ஃபீவர் என்றால் அது ஐபிஎல் ஃபீவர் தான். பொதுவாக ஐபிஎல் தொடர் என வந்தாலே அதற்கு முன்பாக நடைபெறும் ஏலம் தான் மிகப்பெரிய விறுவிறுப்பையும் எதிர்பார்ப்பையும் ரசிகர் மத்தியில் உருவாக்கக்கூடும்.

அந்த ஏலத்தில் எந்த வீரர்களை எந்த அணி எடுக்கப் போகிறது, எப்படி தங்களை பலம் பொருந்திய அணியாக மாற்ற திட்டம் போட்டு அதனை எப்படி செயல்படுத்தும் என்பதை பார்ப்பதற்கே ஒரு உற்சாகமாகவும், பரபரப்பும் கலந்தபடி இருக்கும். அப்படி இருக்கையில் சமீபத்தில் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்துக் கொண்ட மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 19 ஆம் தேதியன்று துபாயில் வைத்து ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது.

- Advertisements -

உலக கோப்பைத் தொடரில் ஜொலித்த வீரர்கள் பலரும் தங்கள் பெயரை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளது அதிக கவனம் பெற்றுள்ளது. இதற்கு மத்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டராக சிறப்பாக ஆடி வந்த ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, டிரேடிங் முறையில் விலைக்கு வாங்கியுள்ளது.

பெங்களூர் அணிக்கு கடந்த சீசன்களில் அந்த அணிக்கு மிகவும் பிரச்சினையாக இருந்தது ஆல் ரவுண்டர் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் இல்லாமல் போனது தான். அதில் தற்போது பெங்களூர் அணி ஆல் ரவுண்டரை எடுத்துள்ள சூழலில் நிச்சயம் ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்து தங்களை அணியை பலப்படுத்தி ஐபிஎல் கோப்பை கைப்பற்றும் என்றும் ஆர்சிபி ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement-

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாடின், கேமரூன் கிரீன் ஐபிஎல் ஆடுவதை தியாகம் செய்து தேசிய அணிக்கு கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். “ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பேட் கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் போன்ற வீரர்கள் சர்வதேச போட்டிக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருந்தனர். அதே போல, கேமரூன் கிரீனும் தனது பணிச்சுமையை கருத்தில் கொண்டு, சில ஐபிஎல் தொடர்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

ஐபிஎல் தொடர் சிறந்த ஒன்றாக இருந்தாலும், பணிச்சுமை அதிகம் இருக்கும் போது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முன்னுரிமை கொடுக்க சில தியாகங்களை செய்ய வேண்டும். எப்போதுமே ஒரு வீரர் தேசிய அணியை தான் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். அது தான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பண்பு” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்