- Advertisement -
Homeவிளையாட்டுமீண்டும் களம் இறங்கும் சின்ன தல ரெய்னா.. ஆனால் இம்முறை சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லை.....

மீண்டும் களம் இறங்கும் சின்ன தல ரெய்னா.. ஆனால் இம்முறை சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லை.. யுவராஜ், கம்பீருக்கும் இடம்

- Advertisement-

ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட், 60 ஓவர் கிரிக்கெட், 50 ஓவர் கிரிக்கெட் t20 கிரிக்கெட் என கிரிக்கெட் தற்போது பல மாதிரி உருமாறி இருக்கிறது. இந்த நிலையில் புதிய வரவாக T10 கிரிக்கெட் என்ற தொடர் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே அபுதாபி T10 என்ற ஒரு தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஜிம்பாப்வேக்கும் தற்போது அமெரிக்காவிலும் T10 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. குளோபல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் யு எஸ் மாஸ்டர் T10லீக் என்று ஒரு தொடரை நடத்துகிறது.

- Advertisement -

இது வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரின் முக்கிய அம்சமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் இடம் பெற உள்ளனர். குறிப்பாக சுரேஷ் ரெய்னா, யுவராஜ், கைஃப், ராபின் உத்தப்பா கௌதம் கம்பீர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆறு அணிகளில் உள்ள நட்சத்திர வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.அட்லாண்டா ஃபயர் என்ற அணியில் ராபின் உத்தப்பா, டேவிட் ஹசி, சிம்மன்ஸ், முகமது இர்பான், டிவைன் ஸ்மித் ,ஜுனைக் சித்திக், கிராண்ட் எலியாட், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

- Advertisement-

அதேபோன்று கலிபோர்னியா நைட்ஸ் என்ற அணியில் சுரேஷ் ரெய்னா, இர்ஃபான் பதான்,முகமது கைஃப், பின்ச், பீட்டர் சிடில், காலிஸ், தினேஷ் ராம்டின், சுதீப் தியாகி போன்ற நட்சத்திர வீரர்கள் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதே போன்று மொரிஸ்வெயில் யூனிட்டி என்ற அணியில் கிறிஸ் கெயில், ஹர்பஜன் சிங், கேவினோ பிரைன், பார்த்திவ் பட்டேல்,கோரி ஆண்டர்சன், ராகுல் ஷர்மா குலசேகரா, நீட்டினி போன்ற பிரபல வீரர்கள் விளையாட உள்ளனர்.

நியூயார்க் வாரியர்ஸ் அணியில் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் அப்ரிடி, மிஸ்பா வுல் ஹக், கம்ரான் அகமல், தில்ஷான், முரளி விஜய், முனாப் பட்டேல்,கப்புகேத்ரா,டமிகா பிரசாத் போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். டெக்சாஸ் சார்ஜஸ் என்ற அணியில் முகமது ஹபிஸ், ராஸ் டைலர், பெரேரா, உமர் குல், தரங்கா போன்ற வீரர்கள் விளையாட உள்ளனர்.

நட்சத்திர வீரர்கள் பலரும் இந்தத் தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதால் t10 தொடர் பிரம்மாண்டமாகவும் அமெரிக்காவில் மேலும் கிரிக்கெட்டை வளர்க்கும் என்றும் இந்த போட்டியில் நடத்தும் T Ten ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சற்று முன்