- Advertisement 3-
Homeவிளையாட்டுஜெய்ஸ்வாலை அவுட் எடுக்க இதான் ஒரே வழி.. இங்கிலாந்து அணி எடுக்க போகும் பெரிய ரிஸ்க்..

ஜெய்ஸ்வாலை அவுட் எடுக்க இதான் ஒரே வழி.. இங்கிலாந்து அணி எடுக்க போகும் பெரிய ரிஸ்க்..

- Advertisement 1-

இங்கிலாந்து அணிக்கு எதிராக மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளின் இந்திய அணி வீரர்கள் பட்டியலில் அதிகம் பேர் இளம் வீரர்களாகவே உள்ளனர். இதில் பலரும் இன்னும் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் கூட ஆகாத சூழலில் ஒரு சிலர் ஒன்றிரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளனர்.

அப்படி ஒரு சூழலில் இது போன்ற இளம் வீரர்களுடன் களமிறங்கி இருந்த இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளது உத்வேகத்தை கொடுக்கும் என்றும் தெரிகிறது. அதே வேளையில் ராகுல் மற்றும் கோலி ஆகியோர் தொடர்ந்து இடம்பெறாமல் இருப்பதால் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் தான் நிச்சயம் களமிறங்க வேண்டும் என்ற சூழலும் உள்ளது.

இதனால் சர்பராஸ் கான், ஜூரேல் உள்ளிட்ட வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிகிறது. இளம் வீரர்கள் அதிகம் இடம்பெற்றிருப்பது ஒரு பக்கம் விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் தனது ஆட்டத்தின் மூலம் இளைஞர்களும் டெஸ்ட் போட்டியில் களமிறங்கலாம் என சிலரை சொல்ல வைத்துள்ளார் ஜெயிஸ்வால்.

இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்டில் இரட்டை சதம் அடித்திருந்தது அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தது. இதனால் அடுத்த 3 போட்டிகளிலும் இவர் தொடர்ந்து இது போன்ற ஆட்டங்களை ஆடி இந்திய அணிக்காக வெற்றியை தேடி கொடுப்பார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

- Advertisement 2-

இந்த நிலையில் ஜெய்ஸ்வாலை அவுட் எடுக்க இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான டேவிட் லாயிட் சில ஆலோசனைகளை அந்த அணிக்கு கொடுத்துள்ளார். “ஜெய்ஸ்வாலிடம் எந்தவித பலவீனமும் இருப்பதாக தெரியவில்லை. இதனால் அவருக்கு எதிராக ஆப் ஸ்பின்னரை பந்து வீச செய்து ரன் அடிக்கும் ஆசையை ஏற்படுத்தி ஜெய்ஸ்வாலின் ஈகோவுடன் இங்கிலாந்து அணி விளையாடி அவரை அவுட் எடுக்க வேண்டும்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கில் சிறப்பாக ஆடி சதம் அடித்திருந்தார். அதேபோல மற்ற இந்திய வீரர்களும் அதிக ரன்கள் அடிக்கும் திறனை பெற்றுள்ளனர். ஆனால் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது இந்த தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்துள்ள ஜெய்ஸ்வால் தான். இதனால் ஏதாவது ஒரு திட்டத்தை வகுத்து இந்த தொடரில் அவரை அவுட் எடுக்க இங்கிலாந்து அணி முயற்சி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்