- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்த பவுலரை மட்டும் தட்டித் தூக்கிட்டா போதும்.. ஆர்சிபி அணிக்கு சூப்பர் ஐடியா கொடுத்த முன்னாள்...

இந்த பவுலரை மட்டும் தட்டித் தூக்கிட்டா போதும்.. ஆர்சிபி அணிக்கு சூப்பர் ஐடியா கொடுத்த முன்னாள் வீரர்.. கப்பு ஜெயிச்சுடுவாங்க போல..

- Advertisement 1-

உலக கோப்பைத் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் அடுத்ததாக வரவுள்ள பெரிய தொடர் என்றால் ஐபிஎல்லை சொல்லலாம். 2023-ல் நடந்த ஐபிஎல் தொடரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றிருந்தது. மேலும் அந்த அணி வென்ற ஐந்தாவது ஐபிஎல் கோப்பை இதுவாகும். தொடர்ந்து, அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலமும் டிசம்பர் 19 அன்று துபாயில் வைத்து நடைபெற உள்ளது.

இதற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பெயர் மற்றும் விடுவித்த வீரர்கள் பெயர் அடங்கிய பட்டியலை வெளியிட்டிருந்தது. மேலும், பல சர்வதேச வீரர்களும் தங்களது பெயரை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு அணிகளும் ஒரு குறிப்பிட்ட பணத்தை மிச்சம் வைத்துள்ள சூழலில், தங்களின் அணிக்கு பொருத்தமான வீரர்கள் பற்றிய பட்டியலை இப்போதே தயாரித்து அவர்களை அணியில் இணைப்பதற்கான யுக்திகள் பற்றியும் தற்போதில் இருந்தே திட்டம் தீட்டி வருவார்கள் என்றும் தெரிகிறது.

இது ஒரு புறம் இருக்க, அனைத்து ஐபிஎல் அணிகளும் எந்த மாதிரியான வீரர்கள் பின்னால் ஐபிஎல் ஏலத்தில் ஓட வேண்டும் என்பது குறித்தும் கிரிக்கெட் பிரபலங்கள் தங்களின் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே, ஆர்சிபி அணி, மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த கேமரூன் கிரீனை டிரேடிங் முறையில் எடுத்துள்ளது. மறுபக்கம், ஹேசல்வுட், ஹசரங்கா உள்ளிட்ட வீரர்களை விடுவிக்கவும் செய்துள்ளது.

இந்த நிலையில், பெங்களூர் அணி எந்த வீரரை ஏலத்தில் குறி வைக்க வேண்டும் என்பது பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

“கேமரூன் கிரீனை ஆர்சிபி எடுத்ததால் அவர்களுக்கு தலைவலியாக இருந்த மிடில் ஆர்டர் மற்றும் ஆல் ரவுண்டர் பிரச்சனை சரியாகி உள்ளது. ஹசரங்காவை குறைந்த விலையில் மீண்டும் ஆர்சிபி எடுக்க முயற்சிக்கலாம். இல்லையெனில் அவருக்கு மாற்று வீரராக ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரஹ்மானை எடுக்க முயற்சிக்கலாம். பவர் பிளேவில் கூட ரன் கொடுக்காமல் பந்து வீசி வரும் முஜிபுர், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானங்களில் கூட சிறப்பாக செயல்படக்கூடிய பந்து வீச்சாளர்.

அதே போல, வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க்கை எடுக்கவும் பெங்களூர் அணி முயற்சிகளை செய்யும் என நான் கருதுகிறேன். ஏனெனில், அவர் ஏற்கனவே பெங்களூர் அணிக்காக ஆடி உள்ளவர். இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அணியில் இருப்பதும் ஒரு சாதகமாக அமையும்” என இர்பான் பதான் கணித்துள்ளார். ஒருவேளை இர்பான் பதான் கூறியது நடந்து பெங்களூர் அணியும் சிறப்பாக செயல்பட்டால், பெங்களூர் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்