- Advertisement -
Homeவிளையாட்டுதோனி இல்ல, நான் தான் சிஎஸ்கே கேப்டன் ஆகியிருக்கணும்.. அவரு உள்ள வந்தது இப்படி தான்.....

தோனி இல்ல, நான் தான் சிஎஸ்கே கேப்டன் ஆகியிருக்கணும்.. அவரு உள்ள வந்தது இப்படி தான்.. ரகசியம் உடைத்த சேவாக்..

- Advertisement-

இன்று சிஎஸ்கே அணியின் முகமாக இருக்கும் தலைச்சிறந்த வீரர் தான் எம். எஸ். தோனி. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பித்த சமயத்திலேயே அவரை ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்த போது அந்த அணியின் அடையாளமாகவே அவர் இருக்கப்போகிறார் என்பது நிச்சயமே யாருக்குமே தெரிந்திருக்காது.

சச்சின், சேவாக், கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே உள்ளிட்ட பல இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் வரிசையில் தோனியும் ஐபிஎல்லில் கால் பதிக்க, மற்ற அனைவரையுமே புறந்தள்ளிவிட்டு இன்று 42 வது வயதிலும் ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடந்த 17 ஆண்டு பயணத்தில் ஐந்து முறை அவர்கள் கோப்பையை கைப்பற்றியதுடன் மட்டுமில்லாமல் ஏறக்குறைய 10 முறை அவர்கள் இறுதி போட்டிக்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர். இப்படி ஐபிஎல் தொடர் என்றாலே நம்பர் ஒன் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளங்க முக்கிய காரணமாக இருந்து வருபவர் தான் தோனி.

இந்த சீசனில் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகிக் கொண்டாலும் ஸ்டம்பின் பின்னால் கீப்பராக நின்று அணிக்கு என்ன தேவையோ அதனை பேட்டிங் மூலமும் செய்து வருகிறார். முன்னதாக 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சேவாக், சச்சின் உள்ளிட்ட பல வீரர்கள் நேரடியாக சில அணிகளின் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட, தோனி ஏலத்தின் மூலமாக சென்னை அணியில் கடும் போட்டிக்கு மத்தியில் இடம் பிடித்திருந்தார்.

- Advertisement-

இந்த நிலையில் தோனிக்கு பதிலாக நான் தான் சிஎஸ்கே அணியில் ஆடி இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் கூறியுள்ளார். “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான வீரர்களை விபி சந்திரசேகர் தான் தேர்வு செய்து வந்தார். அவர் என்னை அழைத்து, ‘நீங்கள் சிஎஸ்கே அணிக்காக ஆட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் டெல்லி அணி உங்களை அணியில் சேர்த்து ஐகான் வீரராக மாற்ற முயற்சி செய்கிறது. அந்த ஆஃபரை ஒத்துக்கொள்ள வேண்டாம்’ என்று கூறினார். நானும் பதிலுக்கு பார்க்கலாம் என்று கூறிவிட்டேன்.

தொடர்ந்து சில தினங்களுக்குள் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்து எனக்கு ஒரு நல்ல ஆஃபர் வரவே நானும் அதனை ஏற்றுக் கொண்டேன். இதனால் ஏலத்திலும் எனது பெயர் இடம் பெறவில்லை. அப்போது ஒருவேளை நான் ஏலத்தில் இடம் பிடித்திருந்தால் சிஎஸ்கே அணி என்னை வாங்கி அவர்களின் கேப்டனாக கூட என்னை நியமித்து இருப்பார்கள். ஆனால் அதன் பின்னர் தான் தோனியை அவர்கள் அணிக்கு வாங்கி கேப்டனாகவும் மாற்றிக் கொண்டார்கள்” என சேவாக் கூறினார்.

சற்று முன்