- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித்துக்கு தெரியாமல் மும்பை அணி போட்ட பிளான்?.. அவருக்கு இனியும் ஒரு பெரிய ஆப்பு காத்திருக்குதா..

ரோஹித்துக்கு தெரியாமல் மும்பை அணி போட்ட பிளான்?.. அவருக்கு இனியும் ஒரு பெரிய ஆப்பு காத்திருக்குதா..

- Advertisement-

எந்த பக்கம் திரும்பினாலும் ரோஹித்தை ஏன் கேப்டன் பதவியில் இருந்து மும்பை அணி மாற்றியது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் ரசிகர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 17 வது ஐபிஎல் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாகவே, ஐபிஎல் ஏலம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அடுத்தடுத்து பல ட்விஸ்ட்கள் நடந்து கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ஹர்திக் மீண்டும் மும்பை அணியில் இணைந்தது, ரோஹித்திற்கு பதிலாக ஹர்திக் மும்பை கேப்டன் ஆனது, ரசிகர்கள் இதனால் கடுப்பாகி குழம்பி போனது என ஒவ்வொரு நாளும் ஒரு டாபிக் வைரலாகி கொண்டே தான் இருக்கிறது. 10 ஆண்டுகள் மும்பை அணிக்காக ஆடி 5 கோப்பைகளை வென்று கொடுத்தவரை விட, குஜராத் அணிக்காக இரண்டே சீசனில் ஆடி ஒரு கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக் சிறந்த கேப்டனா என ஒரு பெரிய விவாதமே இணையத்தில் நடந்து வருகிறது.

- Advertisements -

ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் எடுத்த முடிவு சரி தான் என ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மறுபக்கம், அதற்கு மறுப்பு தெரிவித்து ரோஹித் தான் தங்களின் கேப்டனாக தொடர வேண்டும் என மும்பை ரசிகர்களும் இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர். இதற்கு நடுவே, ரோஹித் ஷர்மா சிஎஸ்கே அணியில் தோனியின் தலைமையில் ஆட வேண்டும் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இப்படி மும்பை அணி எடுத்த முடிவு அனைத்து பக்கங்களிலும் விவாதத்தை உண்டு பண்ணி விட்டது. தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஏபி டிவிலியர்ஸ், ஹர்திக்கை கேப்டனாக்கிய முடிவு நல்லது தான் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் ஹர்திக் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement-

“மும்பை அணி இவ்வளவு சீக்கிரம் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித்தை மாற்றி உள்ளது எனக்கும் ஆச்சரியமாக தான் உள்ளது. இது மிகவும் வேகமாக நடந்து விட்டது. ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் எடுத்த போதே கேப்டன் ஆவது பற்றி பேசி தான் மும்பை அணி எடுத்திருக்கும். ஆனால் ரோஹித்திடம் இது பற்றி விவாதிக்கப்பட்டதா என எனக்கு தெரியவில்லை.

2024 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பையில் ரோஹித் கேப்டனாக இருப்பாரா என்பதை பார்க்க வேண்டும். ஏனென்றால், ரோஹித் கேப்டனாக இருந்து அவரது தலைமையில் ஹர்திக் அணியில் ஆடுவது எப்படி நடக்கும்” என கேள்வி ஒன்றையும் வாசிம் ஜாஃபர் எழுப்பி உள்ளார்.

சற்று முன்