- Advertisement 3-
Homeவிளையாட்டுஅதுக்குள்ள கேப்டன் பதவி கேட்குதா.. உங்க பிரச்சனைய முதல்ல சரி பண்ணுங்க.. பாண்டியாவுக்கு பகிரங்க அட்வைஸ்

அதுக்குள்ள கேப்டன் பதவி கேட்குதா.. உங்க பிரச்சனைய முதல்ல சரி பண்ணுங்க.. பாண்டியாவுக்கு பகிரங்க அட்வைஸ்

- Advertisement 1-

இந்திய அணி அடுத்ததாக ரோஹித் ஷர்மா தலைமையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரில் களமிறங்குகிறது. இதில் ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும் சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு சர்வதேச டி 20 போட்டிகளில் ஆட உள்ளனர். இதனால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் உருவாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடருக்கான இந்திய அணியை அறிவிக்க பிசிசிஐ அதிக நேரம் எடுத்துக் கொண்டது. ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிராக வீரர்களை அறிவித்த போதிலும் இந்திய அணி காலம் தாழ்த்தி வந்தது. ஒரு பக்கம் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் மீண்டும் டி 20 போட்டியில் ஆடப் போவதாக தகவல் தெரிவிக்க, இன்னொரு பக்கம் அவர்கள் இருவரும் இனிமேல் குறைந்த ஓவர் போட்டியில் ஆட மாட்டார்கள் என்றும் ஹர்திக் பாண்டியா தான் டி 20 அணியை வழிநடத்த போகிறார் என்றும் ஒரு தகவல் பரபரப்பாக பரவி வந்தது.

அப்படி இருக்கையில் ஹர்திக் பாண்டியா காயத்தின் காரணமாக இந்த டி20 தொடரில் இருந்து ஆடாமல் போக, ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே டி20 அணிக்கு இனிமேல் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக தொடர்வார் என்ற ஒரு கருத்தும் பரவலாக இருந்து தான் வருகிறது. உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆடும் கடைசி டி 20 தொடர் இதுவாக இருந்தாலும், இதே கேப்டன் ரோஹித் டி20 உலக கோப்பைக்கும் கேப்டனாக செயல்படுவாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஆனாலும் டி20 உலக கோப்பைத் தொடருக்கு இன்னும் நான்கு மாதங்களுக்கு மேல் இருப்பதால் ஒருவேளை ஹர்திக் பாண்டியா கூட இந்திய அணியின் கேப்டனாகும் பொறுப்பை பெறலாம் என்றும் அவருக்கு ஆதரவான ரசிகர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிறந்த கேப்டனாக இருக்கும் ரோஹித்தை சுற்றியே இப்படி ஒரு கருத்து இருந்து வரும் நிலையில், ஹர்திக் பாண்டியா பற்றி முன்னாள் வீரர் கிரண் மோரே ஒரு முக்கிய கருத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

- Advertisement 2-

இவர் ஹர்திக் பாண்டியா பற்றி பேசுகையில், “முதலில் ஹர்திக் ஃபிட்டாக இருக்க வேண்டும். அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆட வேண்டும். அது தான் மிக தேவையான ஒன்று. அதை ஹர்திக் பாண்டியா செய்து விட்டாலே அவர் கேப்டனாகும் வாய்ப்பையும் பெற்று விடுவார். அவர் காயத்தில் இருந்து சரியானதும் உலக கோப்பைத் தொடருக்கு முன்பாக சில போட்டிகளில் அவர் ஆட வேண்டும்.

அவர் எப்போது கிரிக்கெட் போட்டிகளில் ஆட தொடங்குவார் என தெரியவில்லை. ஒரு வேளை ஐபிஎல் தொடருக்கு கூட அவர் தயாராகலாம். மிகவும் கடினமாக ரெடியாகி வரும் ஹர்திக் பாண்டியா, உலகத்தரம் வாய்ந்த ஒரு ஆல் ரவுண்டர் என்பதால் அவரை போன்ற ஒரு வீரரை அனைத்து அணிகளும் விரும்பும்” என கிரண் மோரே தெரிவித்துள்ளார்.

சற்று முன்