- Advertisement -
Homeவிளையாட்டுகில்லை இப்போ கேப்டனா போட்டிருக்க கூடாது.. குஜராத் இப்படி ஒரு வாய்ப்பை கோட்டை விட்டுட்டாங்களே.. முன்னாள்...

கில்லை இப்போ கேப்டனா போட்டிருக்க கூடாது.. குஜராத் இப்படி ஒரு வாய்ப்பை கோட்டை விட்டுட்டாங்களே.. முன்னாள் வீரரின் பரபர கருத்து

- Advertisement-

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில், அடுத்த ஆண்டு ஆரம்பமாக உள்ள ஐபிஎல் தொடர் குறித்து தற்போது முதலே கருத்துக்களை அள்ளி வீச ஆரம்பித்து விட்டனர் கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள்.

ஐபிஎல் ஏலம், டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், உலக கோப்பைத் தொடரில் கலக்கிய வீரர்களான ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்சல், மதுஷங்கா, டிராவிஸ் ஹெட் உள்ளிட்ட பலரின் பெயர்களும் ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கும் அதிகரித்துள்ளது. இதில் எந்த அணிகள் எந்த வீரரை சேர்க்க போட்டி போடும், எந்த வீரர் அதிக தொகைக்கு ஏலம் போவார் என்பது குறித்த பல கணிப்புகளும் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது.

இதனிடையே, குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கி உள்ளது. சிறந்த ஐபிஎல் கேப்டனாக இருந்த போதும் தாமாக முன் வந்து இந்த முடிவை எடுத்த ஹர்திக் பாண்டியா, மீண்டும் தாய் வீட்டிற்கே வந்து சேர்ந்துள்ளார். ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் பலம் சேர்ந்துள்ள சூழலில், மறுபக்கம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேன் வில்லியம்சன், ரஷீத் கான் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரார்கள் குஜராத் அணியில் இருந்த போதும் சுப்மன் கில்லுக்கு கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் குஜராத் அணியின் முடிவு குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement-

“குஜராத் அணியின் தக்க வைத்த வீரர்கள் பட்டியலில் கேன் வில்லியம்சன் பெயரை பார்த்த போது அவரை தான் கேப்டன் ஆக்குவார்கள் என நான் நினைத்தேன். அனுபவம் வாய்ந்த ஒருவரை கேப்டனாக்கும் வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பை கில்லுக்கு கொடுத்துள்ளீர்கள். நான் அதை தவறான முடிவு என சொல்லவில்லை. ஆனால், வில்லியம்சன் தலைமையின் கீழ் கில் ஆடியிருந்தால், அவர் நிறைய கற்றுக் கொண்டிருப்பார். அதன் பின்னர், 2025 ஆம் ஆண்டில் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கலாம்.

இருப்பினும் கில்லின் கேப்டன்சியை பார்க்க ஆவலாக இருக்கிறேன். பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டிலும் அவர் எப்படி செயல்பட போகிறார் என்பதை அறிய எதிர்பார்ப்பு உள்ளது” என ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

சற்று முன்