- Advertisement 3-
Homeவிளையாட்டுநீங்கள் இவ்வளவு சென்சிட்டிவாக இருக்க வேண்டியதில்லை. உங்களுக்கு சகிப்புத் தன்மை தேவை - கம்பீருக்கு நீதிமன்றம்...

நீங்கள் இவ்வளவு சென்சிட்டிவாக இருக்க வேண்டியதில்லை. உங்களுக்கு சகிப்புத் தன்மை தேவை – கம்பீருக்கு நீதிமன்றம் அட்வைஸ். எதற்காக தெரியுமா?

- Advertisement-

இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் பாஜகவில் இணைந்தார். அதையடுத்து அவருக்கு 2019 ஆம் ஆண்டு டெல்லியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இதற்கிடையில் அவர் தன்னுடைய கிரிக்கெட் கேரியரையும் இன்னும் முழுவதுமாக விட்டுவிடவில்லை. கிரிக்கெட் சம்மந்தமான விவாதங்களில் கலந்து கொள்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். அரசியலில் இருக்கும் அவர் இப்படி கிரிக்கெட்டிலும் ஆர்வமாக இருப்பதற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisements -

இது சம்மந்தமாக சில மாதங்களுக்கு முன்னர் இந்தி நாளிதழ் ஒன்று ‘கம்பீர் அரசியலை விட கிரிக்கெட்டில்தான் அதிக ஆர்வமாக இருக்கிறார்’ என செய்தி வெளியிட்டு இருந்தது. இதைக் கண்டித்து 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் மூலம் வரும் பணம் தொண்டு நிறுவனத்திற்குச் செல்லும் என கம்பீர் தரப்பு கூறியிருந்தது. மேலும்  தனது பணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினராக தனது நேர்மையைப் பற்றி பொய்யான அவதூறுகள் பரப்பி வருவதாகவும் கூறியிருந்தார். மேலும் தன் மீதுசாதியவாதி மற்றும் கோபமிக்க அரசியல்வாதி என்ற சாயத்தைப் பூசுவதாகவும் அவர் தன் மனுவில் கூறியிருந்தார். செய்தித்தாளின் ஆசிரியர் மற்றும் நிருபர்கள் அவரை குறிவைத்து அவதூறான கட்டுரைகளை தொடர்ச்சியாக வெளியிடுகின்றனர் என்றும் இதன் மூலம் அவர்கள் பத்திரிகை சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் கம்பீரின் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

- Advertisement-

இது சம்மந்தமான வழக்கை விசாரித்த நீதிபதி சந்திர தாரி சிங் “நீங்கள் ஒரு பொது ஊழியர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. நீங்கள் இவ்வளவு சென்ஸிட்டிவாக இருக்க வேண்டியதில்லை. இது சமூக ஊடகங்களின் காலம். இந்த காலத்தில் விமர்சனத்தை எதிர்கொள்ள நீங்கள் தடித்த தோலுள்ளவராக சகிப்புத் தன்மையோடு இருக்க வேண்டும்” என அறிவுரை கூறும் விதமாக பேசியுள்ளார்.

நீதிபதியின் இந்த வார்த்தைகள் இப்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்றுள்ளன. சமீபத்தில் கூட கம்பீர், கிரிக்கெட் வீரர் கோலியிடம் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்