நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி வீரர் கோலிக்கும் லக்னோ அணி ஆலோசகர் கம்பீருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 16 ஆவது ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நடந்துவருகிறது. அனைத்து அணிகளும் சரிபாதி போட்டிகளான 8 போட்டிகளை விளையாடியுள்ளன. இந்நிலையில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதிய போட்டி நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் பாஃப் டு பிளஸ்சி, மைதானத்தின் தன்மையைக் கணக்கில் கொண்டு முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன் படி முதலில் பேட் செய்த பெங்களூர் அணி அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறியது. கோலியும் டு பிளஸ்சியும் மிதமான வேகத்தில் ஸ்கோர்களை சேர்த்தனர். ஆனால் கோலி விக்கெட் விழுந்ததும் மளமளெவன சீட்டுக்கட்டு போல ஆர் சி பி விக்கெட்கள் அடுத்தடுத்து விழ ஆரம்பித்தன. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 126 ரன்கள் மட்டுமே சேர்த்து 9 விக்கெட்களை இழந்தது ஆர் சி பி.
அடுத்து களமிறங்கிய லக்னோ அணியும் பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆர் சி பி, தன் கைவசம் இருந்த அனைத்து பவுலர்களையும் பயன்படுத்தி விக்கெட்களை வீழ்த்தியது. இதனால் 19.5 ஓவர்களில் 108 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 16 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஏற்கனவே இந்த சீசனில் லக்னோ அணியிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது ஆர் சி பி.
இந்த போட்டியை விட அதற்குப் பின்னர் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் ரசிகர்களை பரபரப்படையச் செய்தன. போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகொடுக்கும் இடத்திலேயே கம்பீருக்கும், கோலிக்கும் இடையே ஒரு சீண்டல் நடந்தது. பின்னர் லக்னோ அணி வீரர் கைல் மேயர்ஸ் கோலியிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரை வந்து கம்பீர் கையைப் பிடித்து அழைத்து சென்றார். கம்பீரின் இந்த செயல் கோலியை வெகுவாகக் கோபப்படுத்தியது.
Full video of gambir VS kohli post match fight#ggvskohli #RCBvLSG pic.twitter.com/EhMZHgoAP4
— Not a NOOB (@Noobie_86) May 1, 2023