- Advertisement -
Homeவிளையாட்டுஒரு காலத்துல ரெண்டு பேரும் எப்படி இருந்தாங்க தெரியுமா? கோலிக்காக ஆட்டநாயகன் விருதை விட்டுக் கொடுத்த...

ஒரு காலத்துல ரெண்டு பேரும் எப்படி இருந்தாங்க தெரியுமா? கோலிக்காக ஆட்டநாயகன் விருதை விட்டுக் கொடுத்த கம்பீர்!

- Advertisement-

நேற்று முன் தினம் நடந்த லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி, இந்த சீசனின் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாக நடந்து முடிந்தது. போட்டி முடிந்துவிட்டாலும் இன்னும் அந்த போட்டி சம்மந்தமான சர்ச்சைகள் ஓயவில்லை. மிகவும் லோ ஸ்கோர் மேட்ச்சான இந்த போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மந்தமான இந்த போட்டியில் நடந்த நாடகீய தருணங்கள் வீரர்கள் மட்டும் இல்லாமல் இரு அணி ரசிகர்களையும் கொதிநிலையில் வைத்துள்ளது.

போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகொடுக்கும் இடத்திலேயே கம்பீருக்கும், கோலிக்கும் இடையே ஒரு சீண்டல் நடந்தது. பின்னர் லக்னோ அணி வீரர் கைல் மேயர்ஸ் கோலியிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரை வந்து கம்பீர் கையைப் பிடித்து அழைத்து சென்றார்.

கம்பீரின் இந்த செயல் கோலியை வெகுவாகக் கோபப்படுத்தியது. அதற்கு அவர் ஆவேசமாக ஏதோ சொல்ல இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. பின்னர் சக வீரர்கள் இருவரையும் விலக்கிவிட்டு சமாதானமடையச் செய்தனர். கோலிக்கும் கம்பீருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டே இதுபோல மைதானத்திலேயே ஆக்ரோஷமான மோதல் உருவானதை ஐபில் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இப்படி எலியும் பூனையுமாக இருக்கும் கம்பீரும், கோலியும் ஆரம்ப காலத்தில் சிறந்த நண்பர்களாகவே இருந்தனர். கோலியும் கம்பீரும் இணைந்து இந்திய அணிக்காக பல வெற்றிக் கூட்டணிகளை அமைத்துள்ளனர். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் கூட அவர்கள் அமைத்த பார்டனர்ஷிப் வெற்றிக்காரணிகளில் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதையெல்லாம் விட நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றும் இருவருக்கும் இடையே நடந்தது.

- Advertisement-

2009 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தியா 315 ரன்களை சேஸ் செய்தது. அப்போது அந்த போட்டியில் கம்பீரும் கோலியும் சதமடித்து அந்த போட்டியை வென்றெடுத்தார்கள். அந்த போட்டியில் அடித்ததுதான் கோலியின் முதல் சர்வதேச சதம். அந்த போட்டியில் 150 ரன்கள் அடித்த கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்ட போது, இளம் வீரரான கோலியை ஊக்கப்படுத்தும் விதமாக தன்னுடைய விருதை அவர் விராட் கோலியுடன் பகிர்ந்துகொண்டார் என்பது பலரும் அறியாதது.

டெல்லியை சேர்ந்த இருவரின் நட்பும் அப்படி நெகிழ்வாக தொடங்கி இன்று இருவரையும் எதிரெதிர் துருவங்களாக ஆக்கியுள்ளது காலத்தின் கோலம் என்றுதான் சொல்லவேண்டும்.

சற்று முன்