- Advertisement -
Homeவிளையாட்டுநான் என் வாழ்க்கைல கிரிக்கெட் வீரரா இருந்திருக்கவே கூடாது... முன்னாள் இந்திய நட்சத்திர வீரர் அதிரடி...

நான் என் வாழ்க்கைல கிரிக்கெட் வீரரா இருந்திருக்கவே கூடாது… முன்னாள் இந்திய நட்சத்திர வீரர் அதிரடி கருத்து

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணி 2007ல் டி20 உலகக்கோப்பையும், 2011ல் ஒருநாள் உலகக்கோப்பையும் வெல்ல மிக முக்கியமான வீரர் கவுதம் கம்பீர். அந்த இரண்டு தொடர்களின் இறுதி போட்டியிலும் அவர் விளையாடிய இன்னிங்ஸை யாராலும் மறக்க முடியாது.
தற்போது பாஜக எம்பியாக இருந்தாலும், கிரிக்கெட் வர்ணனையில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரிலும் வர்ணனையாளராக செயல்பட்டுவருகிறார்.

இந்த நிலையில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக இந்திய அணி எந்தவொரு ஐசிசி தொடரையும் வெல்லவில்லை. அதேசமயம் கடந்தமுறை சொந்த மண்ணில் உலகக்கோப்பை நடந்த போது இந்திய அணி சாம்பியன் ஆனது. இதனால், 2011ஐ போல இம்முறையும் இந்தியா உலகக்கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

- Advertisement -

இந்த நிலையில் 2011 உலகக்கோப்பை தொடர் இந்தியாவுக்கு நல்ல தொடராக அமைத்தது தந்ததே ஜாகிர் கான் தான் என கம்பீர் கூறியுள்ளார். 2011 உலகக்கோப்பையை இந்தியா வெற்றி பெற ஜாகீர் கானின் முக்கியத்துவும் குறித்தும், முக்கியமான போட்டிகளில் அவரது பந்துவீச்சு குறித்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசியுள்ளார்.

கம்பீர் கூறுகையில், நாம் யுவராஜ் சிங், தோனி, மற்றும் எனது இன்னிங்ஸ் பற்றி பேசுகிறோம். ஆனால் உண்மையில் ஜாகீர் கான் தான் எங்களுக்கு நல்ல உலகக்கோப்பை தொடரை அமைத்து தந்தார். இங்கிலாந்துக்கு எதிராக ஆண்ட்ருவ் ஸ்ட்ராஸ் விக்கெட் எடுத்த அவரது ஸ்பெல்லை பாருங்கள். இறுதிபோட்டியிலும் அவரது ஸ்பெல்லை பாருங்கள்.

- Advertisement-

ஐந்து ஓவரில் நான்கு மெய்டன்கள், ஒரு ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இப்படித்தான் ஒரு நல்ல தொடரை அமைத்துதர வேண்டும். தற்போது இந்திய அணிக்கும் இப்படி நல்ல தொடராக அமைய வேண்டுமென்றால் பும்ரா சிறப்பாக செயல்பட வேண்டும் என பேசினார்.

மற்றொரு டிவி சேனலில் பங்கேற்ற இவரிடம் ரேபிட் ஃபயர் கேள்விகள் கேட்டக்கப்பட்டது. அதில், உங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய வருத்தம் என்றால் எதை கூறுவீர்கள் என கேட்டதற்கு, கம்பீர் ​​”நான் கிரிக்கெட் வீரராக இருந்திருக்கக் கூடாது” என பதில் கூறி அனைவரையும் அதிர்ச்சியளித்தார். ஆனால் அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

2011 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஜாகீர் கான் முதலிடத்தில் இருந்தார். அவரது ஓய்வுக்கு பிறகு அணியில் இடதுகை பந்துவீச்சாளர் இல்லாமல் இந்தியா திணறுகிறது. தற்போது அறிவிக்கப்பட்ட அணியிலும் இடதுகை பந்துவீச்சாளர் இல்லாததால் பும்ரா மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. தனது கருத்துக்கள் மற்றும் செயல்களால் கம்பீர் சர்ச்சையில் சிக்குவதும் வழக்கம். சமீபத்தில் ஆசிய கோப்பை தொடரில் கோலி கோலி என ரசிகர்கள் முழக்கமிட்டதால் தனது நடுவிரலை காட்டி அநாகரீகமாக நடந்துகொண்டார். பின் தாய் நாட்டை பற்றி அசிங்கமாக பேசியதால் தான் அப்படி நடந்துகொண்டதாக அவர் விளக்கம் அளித்தார்.

சற்று முன்