Homeகிரிக்கெட்இந்த கோப்பைய ஜெய்க்கறதெல்லாம் அவளோ ஈசி இல்ல விராட் என நேர்காணலில் உளறிக்கொட்டிய கங்குலி. ...

இந்த கோப்பைய ஜெய்க்கறதெல்லாம் அவளோ ஈசி இல்ல விராட் என நேர்காணலில் உளறிக்கொட்டிய கங்குலி. இத கூட சரியா பண்ண மாட்டிங்களா என ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

-Advertisement-

சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் முன்னாள் இந்திய அணியின் கேப்டனான சவுரவ் கங்குலி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி குறித்த ஒரு சர்ச்சையான தகவலை தெரிவித்து அதன் மூலம் இணையத்தில் பேசுபொருளாக மாறி இருந்தார். அந்த நேர்காணலில் அவர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதை காட்டிலும் ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறுவது தான் மிகவும் கடினமானதுஎன்ற ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார்.

அதே நேர்காணலில் அவர் தவறுதலாக விராட் கோலியின் பெயரைக் கூறி அதன் மூலம் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். அந்த நேர்காணலை பொருத்தவரை இந்திய கிரிக்கெட் அணியின் தாதா என்று அழைக்கப்படும் கங்குலி ரோஹித் சர்மாவை புகழும் வகையில், அவர் ஐந்து ஐபிஎல் ட்ராபிகளை மும்பை அணிக்காக வென்று கொடுத்துள்ளார் என்று பேசி இருந்தார்.

-Advertisement-

அதே சமயம் ரோகித் சர்மா மேல் தனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார் அதோடு அவர் ஐபிஎல் தொடரில் மொத்தம் பிலேஆப்பிர்க்கு முன்பு 14 போட்டிகள் இருக்கிறது ஆனால் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலோ வெறும் நான்கு முதல் ஐந்து போட்டிகள் தான் செமி பைனலுக்கு முன்பு இருக்கிறது. ஐபிஎல்-ல் 17 போட்டிகள் விளையாடினால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும் என்னும் வகையில் அவர் பேசியிருந்தார்.

அதேசமயம் நெறியாளர் விக்ராந்த், கங்குலியிடம் விராட் கோலி கேப்டன்சி பதிவியிலிருந்து விலகிய பிறகு ரோகித் சர்மாவை நீங்கள் எப்படி கேப்டனாக தீர்மானித்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், அந்த சமயத்தில் விராட் கோலி திடீரென பதவி விளங்குவார் என்று நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதே வேலையில் இந்திய அணியை வழிநடத்தக்கூடிய தகுதி வாய்ந்த வீரராக ரோஹித் சர்மா தான் அப்போது இருந்தார் அதனால் அவரை நாங்கள் தேர்ந்தெடுத்தோம் என்று கூறியிருந்தார்.

-Advertisement-

இப்படியாக இந்த இன்டர்வியூ சென்று கொண்டிருக்கையில் ஐபிஎல் குறித்து கங்குலி பேசுகையில், ஐபிஎல் போட்டியில் வெற்றிபெறுவது அவ்வளவு எளிதல்ல விராட் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் உடனே சுதாரித்துக்கொண்டு, விக்ராந்த்(நெறியாளரின் பெயர்) என்று அவர் கூறியுள்ளார். இப்படி அவர் விராட், விக்ராந்த் என மாறி மாறி உளறியதால் அதை நெட்டிசன்கள் கையில் எடுத்து அவரை ட்ரோல் செய்ய துவங்கியுள்ளனர்.

-Advertisement-

சற்று முன்