இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக கோலியை நாம் சொல்லலாம். அவர் தலைமையில் இந்திய அணி மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியது. ஆனால் ஒரு குறையாக அவர் தலைமையில் எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்பதை சொல்லலாம்.
இந்த விமர்சனங்களால் அவர் 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரோடு அந்த வடிவில் இருந்து கேப்டன்சியை துறப்பதாகக் கூறினார். அந்த உலகக்கோப்பையில் இந்திய அணி மோசமாக தோற்று லீக் போட்டிகளோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
டி20 போட்டிகளில் மட்டும் கேப்டன் பொறுப்பை கோலி விட்டுகொடுப்பதாக அறிவித்தாலும், ஒருநாள் போட்டிகளில் இருந்தும் அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது பிசிசிஐ. பின்னர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுகுறித்து பேசிய பிசிசிஐ தரப்பு, டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பை துறந்தால் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பொறுப்பும் பறிக்கப்படும் என கோலிக்கு முன்கூட்டியே தெரிவித்திருந்ததாக சொல்லப்பட்டது.
ஆனால் அந்தமாதிரி தகவல் எதுவும் தனக்கு தெரிவிக்கப்படவில்லை என கோலி மறுத்தார். இதன் மூலம் பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கேப்டனாக செயலாற்றிய கோலி 2022 ஆம் ஆண்டு திடீரென்று தென் ஆப்பிரிக்கா தொடருக்குப் பின்னர் டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பையும் துறந்தார். அதனால் மூன்று வடிவிலான போட்டிக்கும் ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதுபற்றி பேசியுள்ள முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி “விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என்பதை பிசிசிஐ எதிர்பார்க்கவே இல்லை. அதே சமயம் பிசிசிஐ அதற்காக தயாராகவும் இல்லை. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு அவர் இப்படி அறிவித்தது நாங்கள் எதிர்பாராத ஒன்று. ஆனால் அது குறித்து இப்போது பேசுவதில் பயன் இல்லை. காரணம், கோலி ஏற்கனவே கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டார்.
இதையும் படிக்கலாமே: சுப்மன் கில் கட்ட வேண்டிய பைன் மட்டும் எத்தனை லட்சங்கள் தெரியுமா? மனுஷன் 2 லட்சத்துக்கு மேல கை காசு வேற போட வேண்டி இருக்கு
அவர் ஏன் அப்போது அப்படி பதவி விலகினார் என்பதை அவரால் மட்டுமே கூற முடியும். அந்த சமயத்தில் செலெக்டர்கள் இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய ஒரு பொறுப்பில் இருந்தனர். அப்போது ரோகித் தான் சிறந்த தேர்வாக தெரிந்தார் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கங்குலி.