- Advertisement -
Homeவிளையாட்டு2011 WC ஜெயிச்சு கொடுத்த யுவராஜ் சிங்கை மறந்துட்டீங்க, ஆனா.. தோனிய மறைமுகமா சீண்டினாரா கம்பீர்?

2011 WC ஜெயிச்சு கொடுத்த யுவராஜ் சிங்கை மறந்துட்டீங்க, ஆனா.. தோனிய மறைமுகமா சீண்டினாரா கம்பீர்?

- Advertisement-

இந்திய அணி ஐம்பது ஓவர் உலக கோப்பையை கைப்பற்றி சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனாலும், 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி தோனி சிக்ஸ் அடித்து போட்டியை முடித்து வைத்தது இன்னும் பலரது கண்ணில் அப்படியே படம் போல வந்து போகும். அந்த அளவுக்கு இறுதி போட்டியின் கடைசி தருணங்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் உணர்ச்சி ததும்பிய தருணமாகவும் இருந்தது.

இதன் பின்னர், இந்திய கிரிக்கெட் அணி பலம் வாய்ந்த ஒன்றாக திகழ்ந்த போதும் அந்த அணியால் ஒரு முறை கூட எந்த உலக கோப்பையையும் கைப்பற்ற முடியவே இல்லை. சமீபத்தில் கூட, ஐம்பது ஓவர் உலக கோப்பையின் இறுதி போட்டியில் இந்திய அணி எப்படியாவது கோப்பையை கைப்பற்றி விடும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருந்தது. ஆனால் வருங்காலத்தில், 2011 உலக கோப்பை தொடரில் நடந்த மேஜிக் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இதனிடையே, 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை குறித்து கம்பீர் பேசியுள்ள கருத்து தற்போது அதிக பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணம், சச்சின், சேவாக், யுவராஜ் சிங், கவுதம் கம்பீர், ஜாகீர்கான் என அனைத்து வீரர்களும் ஒவ்வொரு போட்டியிலும் தங்களின் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தது தான்.

ஆனால், இறுதி போட்டியில் சச்சின் மற்றும் சேவாக் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். கம்பீர், கோலி, தோனி ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். அந்த தொடர் முழுக்க பெரிய அளவில் ரன் குவிக்காமல் இருந்த கேப்டன் தோனி, இறுதி போட்டியில் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தார். மேலும், கடைசியாக அவர் சிக்ஸ் அடித்து யுவராஜ் சிங்குடன் தங்களின் வெற்றியை கொண்டாடியது மிகவும் நெகிழ்ச்சியானதாக இருந்தது.

- Advertisement-

பலருக்கும் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை வெற்றி என்றால் தோனியை தான் முதலில் ஞாபகம் வரும். ஆனால், சிறப்பாக ஆடிய மற்ற வீரர்களை யாருமே கண்டு கொள்ளவில்லை என்பது தொடர்பாக அந்த அணியில் இடம்பெற்றிருந்த கம்பீர் பல முறை குறிப்பிட்டுள்ளார். மேலும் தோனி மட்டும் உலக கோப்பையை வெல்ல காரணம் இல்லை என்றும் அவர் கூறி இருந்தார்.

இந்த நிலையில், 2011 உலக கோப்பை குறித்து மற்றொரு கருத்தையும் கவுதம் கம்பீர் தற்போது வெளியிட்டுள்ளார். “2011 உலக கோப்பை தொடர் நாயகன் யுவராஜ் சிங் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரை பற்றி ஏன் யாரும் இப்போது பேசுவதில்லை. ஏனென்றால் அவரை விளம்பரப்படுத்திக் கொள்ள அவருக்கென தனியாக ஒரு விளம்பர குழு இல்லை என்பது தான்.

போட்டி ஒளிபரப்பாளர், ஒரு வீரரை மட்டும் விளம்பரப்படுத்தாமல் டிரஸ்ஸிங் ரூமில் உள்ள அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும். ஒருவரை மட்டுமே தொடர்ந்து விளம்பரபடுத்தி கொண்டிருந்தால் அவர் ஒரு பிராண்டாக மாறி விடுவார்” என தோனியை மறைமுகமாக கம்பீர் விமர்சனம் செய்துள்ளது போல தெரிகிறது.

சற்று முன்