- Advertisement -
Homeவிளையாட்டுசுரேஷ் ரெய்னா ரிட்டயர்டு ஆன பின் வந்த பிரச்சனை.. மூணே மேட்சில் முற்றுப்புள்ளி வெச்ச கம்பீர்..

சுரேஷ் ரெய்னா ரிட்டயர்டு ஆன பின் வந்த பிரச்சனை.. மூணே மேட்சில் முற்றுப்புள்ளி வெச்ச கம்பீர்..

- Advertisement-

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டதும் அவர் மீதான எதிர்பார்ப்பு தான் அதிகமாக இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் ஐபிஎல் தொடரில் ஒரு சில அணிகளில் ஆலோசகராக இருந்து அதன் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை கம்பீர் ஏற்படுத்தியது தான். லக்னோ அணி இதுவரை மூன்று ஐபிஎல் தொடரில் ஆடி உள்ள நிலையில் அதில் இரண்டு தொடரில் ஆலோசகராக கவுதம் கம்பீர் செயல்பட்டிருந்தார்.

இந்த இரண்டு முறையும் பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்த லக்னோ அணியால் அவர் சென்ற பின்பு அதனை எட்ட முடியாமல் போயிருந்தது. இதே போல கொல்கத்தா அணியின் ஆலோசராக இந்த சீசனில் இணைந்த கம்பீர் அவர்கள் கோப்பையை கைப்பற்றவும் முக்கிய காரணமாக அமைந்திருந்தார். இப்படி ஐபிஎல் தொடரில் பல அணிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கம்பீர், நிச்சயம் இந்திய அணியிலும் மிகப்பெரிய பங்கு வகிப்பார் என்பது தான் அனைவரின் நம்பிக்கை.

அதுமட்டுமில்லாமல் தற்போது அந்த மாற்றங்கள் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர்களிலேயே பிரதிபலிக்க தொடங்கிவிட்டது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரும் ஆரம்பமாக உள்ள நிலையில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுடன் இணைந்து கவுதம் கம்பீர் இந்திய அணியை முக்கியமான இடத்திற்கு கொண்டு போவார் என தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில் தான் கம்பீர் வந்த முதல் தொடரிலேயே மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை பற்றி தற்போது பார்க்கப் போகிறோம். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, சேவாக், யுவராஜ் உள்ளிட்ட வீரர்கள் பேட்ஸ்மேன்களாக மட்டுமில்லாமல் பகுதிநேர பந்து வீச்சாளர்களாகவும் பல முக்கியமான போட்டிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணிக்கு நெருக்கடி உருவாகும் நேரத்தில் ஒரு சில ஓவர்கள் வீசி போட்டியில் மாற்றத்தையும் உண்டு பண்ணி விடுவார்கள்.

- Advertisement-

சுரேஷ் ரெய்னா வரை அப்படி ஒருவர் அணியில் இருந்து வந்தார். ஆனால் அவரும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த பின்னர் இந்திய அணியில் பேட்ஸ்மேன் மற்றும் பகுதிநேர பந்து வீச்சாளராக யாருமே அமையவில்லை. விராட் கோலி, ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்ட பலரை இந்திய அணி பேட்ஸ்மேன்களாக பார்த்து விட்டாலும் அவர்களிடம் பகுதிநேர பந்து வீச்சுத் திறமை இல்லாமல் தான் இருந்தது.

இந்த நிலையில் தான் கம்பீர் பயிற்சியாளராக வந்த இந்திய அணியின் முதல் தொடரிலேயே அப்படியான விஷயத்தை புகுத்த வேண்டும் என செயல்பட்டு வருகிறார். ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ், ரியான் பராக் என பேட்ஸ்மேன்களாக மட்டுமே இருக்கும் வீரர்கள் இந்த தொடரில் பந்து வீசி இருந்தனர்.

இதற்கு பலனும் கிடைத்ததால் இனி வரும் போட்டிகளிலும் இப்படி பேட்ஸ்மேன்கள் பலரையும் பகுதி நேர பந்து வீச்சாளராக கம்பீர் பயன்படுத்துவார் என தெரிகிறது. இதற்கு மற்றொரு சிறந்த உதாரணமாக ஒரு நாள் தொடருக்கு முன்பாக ஷ்ரேயஸ் ஐயரும் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்