- Advertisement -
Homeவிளையாட்டுஇன்னும் ஆத்திரம் அடங்கல.. அடுத்த சீசனில் மும்பை, சிஎஸ்கே கதையை முடிக்க கம்பீர் போட்ட பிளான்..

இன்னும் ஆத்திரம் அடங்கல.. அடுத்த சீசனில் மும்பை, சிஎஸ்கே கதையை முடிக்க கம்பீர் போட்ட பிளான்..

- Advertisement-

ஐபிஎல் தொடர் முடிந்து டி 20 உலகக் கோப்பையை எண்ணி ரசிகர்கள் தயாராகிவிட்டாலும் இன்னொரு பக்கம் கொல்கத்தா அணியின் கோப்பையை வென்றதை பற்றி பல்வேறு கருத்துகளும் பரவலாக இருந்து தான் வருகிறது. இதற்கு காரணம் கௌதம் கம்பீர் ஆலோசகராக மீண்டும் கொல்கத்தா அணியில் இணைந்ததும் அவர்கள் கோப்பையை வென்றிருந்தது தான்.

கொல்கத்தா அணியில் கம்பீரைத் தாண்டி அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டித், அபிஷேக் நாயர், பரத் அருண் உள்ளிட்டோரும் அதிக பங்களிப்பை அளித்திருந்தனர். இவர்களது பெயர் அதிகம் பேசப்படாமல், கம்பீரை பற்றி பலரும் சொல்லி வந்தாலும் அவர் எடுத்த சில முடிவுகளும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

கொல்கத்தா அணியின் கேப்டனாக 7 ஆண்டுகள் இருந்து வந்த கம்பீர், இரண்டு சீசனில் அவர்கள் கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். அதுமட்டுமில்லாமல் சுழற்பந்து வீச்சாளராக இருந்த சுனில் நரைனை தனது தலைமையில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக களமிறங்குவதற்கு காரணமும் கம்பீர் தான்.

ஆனால் கம்பீர் கொல்கத்தா அணியில் இருந்து விலகியதும் சுனில் நரைன் மீண்டும் கடைசி கட்டத்தில் தான் பேட்டிங் செய்து வந்தார். இதனிடையே, தற்போது கம்பீர் அணியில் இணைந்ததுமே நரைனின் பேட்டிங்கை மீண்டும் பழைய ரூட்டில் மாற்றி விட்டார். இதனால் தொடக்க வீரராக களமிறங்கி இந்த சீசனில் 488 ரன்கள் எடுத்திருந்த சுனில் நரைன், மொத்தம் 17 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தலான ஆல்ரவுண்டராக வலம் வந்திருந்தார்.

- Advertisement-

அவரைப் போலவே பல இளம் பந்து வீச்சாளர்களும் கொல்கத்தா அணியில் சிறப்பாக செயல்பட முக்கிய காரணமாக இருந்தவர் கம்பீர். இதனிடையே மூன்றாவது முறையாக கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த கம்பீர், தற்போது தெரிவித்துள்ள கருத்து இன்னும் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பை அதிகப்படுத்தி உள்ளது.

வருங்காலத்தில் கொல்கத்தா அணிக்காக தனது பங்கு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த கம்பீர், “என்னிடம் நீங்கள் அதை பற்றி கேட்டால் இன்னும் இரண்டு கோப்பைகள் நாங்கள் சென்னை மற்றும் மும்பை அணியை விட குறைவாக உள்ளோம். இதனால் தற்போது கோப்பையை வென்றாலும் அதே பசி எப்போதும் உள்ளது.

ஐபிஎல் தொடரில் மிக வெற்றிகரமான அணியாகவும் நாங்கள் மாற வேண்டும் என்று நினைக்கிறோம். அப்படி நாங்கள் வரவேண்டும் என்றால், இன்னும் மூன்று ஐபிஎல் கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பது பாக்கி உள்ளது. அப்படி மூன்று முறை இனி வெல்ல வேண்டும் என்றால் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும்.

இதனால் எங்களுடைய அடுத்த மிஷன், கொல்கத்தா அணியை மிகச்சிறந்த அணியாக மாற்றுவது மட்டும்தான். அதைவிட சிறந்த உணர்வு நிச்சயம் எதுவும் இருக்காது” என கம்பீர் கூறியுள்ளார்.

சற்று முன்