- Advertisement -
Homeவிளையாட்டுஅவரோட உண்மையான முகமே வேற.. எதிராணியோட சண்டைக்கு போக கூட தயாரா இருப்பாரு - அஸ்வின்...

அவரோட உண்மையான முகமே வேற.. எதிராணியோட சண்டைக்கு போக கூட தயாரா இருப்பாரு – அஸ்வின் பகிர்ந்த தகவல்

- Advertisement-

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்து, அந்தந்த அணிகள் தாங்கள் விளையாடவுள்ள முதல் போட்டிக்கான மைதானத்திற்கு சென்று சேர்ந்துள்ளனர். அதேபோல் இன்னொரு பக்கம் இந்திய ரவிச்சந்திரன் அஸ்வின் யூட்யூபில் குட்டி ஸ்டோரி என்ற பெயரில் உலகக்கோப்பை பற்றி பேசி வந்தார்.

இவரும் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவும் இணைந்து பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. 1975 உலகக்கோப்பை தொடங்கி தற்போதைய உலகக்கோப்பை தொடர் வரையிலான மாற்றங்கள், வரலாற்று சான்றுகள், வெற்றிகள், தோல்விகள் உள்ளிட்டவை குறித்து பேசினர்.

இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள குட்டி ஸ்டோரி வீடியோவில் 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து இருவரும் பேசி இருக்கின்றனர். அதில் கவுதம் கம்பீர் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ள கருத்துகள் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது. அதில், இந்தியாவிலேயே ரசிகர்களால் அதிக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்ட கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தான்.

கவுதம் கம்பீர் மிகச்சிறந்த அணிக்கான வீரர் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தனது அணிக்காக எதிரணிகளுடன் சண்டைக்கு கூட செல்ல தயாராக இருப்பார். அணிக்காக களத்திலும் சண்டை செய்யக் கூடிய வீரர். அவர் பெரிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார் என்றாலும், முகத்திற்கு நேராக பேசக் கூடிய வீரர்.

- Advertisement-

2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆடிய இன்னிங்ஸை போல் இந்திய அணிக்காக பல்வேறு இன்னிங்ஸ்களை ஆடி இருக்கிறார். 2011ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் கூட சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆட்டமிழந்த போது, கொஞ்சம் கூட அழுத்தத்தை வெளிப்படுத்த மாட்டார். அதேபோல் இந்திய அணியையும் அழுத்தத்தை உணர வைக்காமல் செயல்பட்டார்.

அவ்வளவு ஏன், விராட் கோலி ஆட்டமிழந்த போது கூட கவுதம் கம்பீர் எந்தவித சிரமமும் இல்லாமல் சிறப்பாக விளையாடி இருப்பார். அன்றைய நாளில் கவுதம் கம்பீர் நிதானமாக விளையாடி இருந்தால் நிச்சயம் 120 முதல் 130 ரன்களை சேர்த்திருக்க முடியும். ஆனால் அவர் எப்போதும் சுயநலமாக கிரிக்கெட் விளையாடியதில்லை. எப்போது அணியின் இலக்கிற்காகவே விளையாடி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்