- Advertisement -
Homeவிளையாட்டுலக்னோ அணிக்கு விபூதி தான் போலயே.. ஷாரூக் கானை சந்தித்த கவுதம் கம்பீர்.. இது தான்...

லக்னோ அணிக்கு விபூதி தான் போலயே.. ஷாரூக் கானை சந்தித்த கவுதம் கம்பீர்.. இது தான் காரணமா இருக்குமோ

- Advertisement-

லக்னோ அணியின் உலகளாவிய ஆலோசகராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். கடந்த இரு சீசன்களில் லக்னோ அணி ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கவுதம் கம்பீரும் முக்கிய காரணமாக உள்ளார். அதுமட்டுமல்லாமல் லக்னோ அணியில் அனைத்து முக்கிய முடிவுகளையும் கம்பீர் தான் எடுத்து வருகிறார்.

அண்மையில் லக்னோ அணியில் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் உடனான ஒப்பந்தம் நீட்டிக்கப்படாததற்கு கம்பீரே காரணம். அவருக்கு பதிலாக கம்பீரின் உற்ற நண்பரும், ஆஸ்திரேலியா முன்னாள் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கரை லக்னோ அணியின் பயிற்சியாளராக கொண்டு வரப்பட்டார். அதேபோல் மார்னே மார்கல், எம்எஸ்கே பிரசாத் உள்ளிட்டோரையும் கம்பீர் தான் தேர்வு செய்தார்.

அந்த அளவிற்கு கவுதம் கம்பீருக்கு லக்னோ அணியில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐபிஎல் தொடரின் போது விராட் கோலி உடனான மோதல், க்ரின்ச் வீரரான நவீன் உல் ஹக்கை ஆதரித்தது, விராட் கோலியை சண்டைக்கு இழுத்த கைல் மேயர்ஸ் உடன் நெருக்கம் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

இதனிடையே கவுதம் கம்பீர் லக்னோ அணியில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அந்த தகவலில் உண்மையில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கவுதம் கம்பீர் கேகேஆர் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாரூக் கானை சந்தித்துள்ளார். இவர் ஏற்கனவே கேகேஆர் அணியின் கேப்டனாக 2 முறை கோப்பையை வென்றுள்ளார்.

- Advertisement-

இதனால் மீண்டும் கேகேஆர் அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பிரண்டன் மெக்கல்லம் விலகிய போதே கேகேஆர் அணி தரப்பில் கவுதம் கம்பீருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அப்போது கம்பீர் லக்னோ அணியுடன் இருந்தார்.

அதேபோல் கம்பீர் – ஷாரூக் கான் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், கேகேஆர் அணியின் கேப்டனான நிதிஷ் ராணா இரு பெரும் ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். ஒருவேளை மீண்டும் கேகேஆர் அணியுடன் கம்பீர் இணைகிறாரா என்ற சந்தேகத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுய்ள்ளார். இதனால் கேகேஆர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சற்று முன்