- Advertisement 3-
Homeவிளையாட்டுஇதுனால தான் கோலி கூட சண்டை போட்டேன்.. ஐபிஎல் தொடரில் நடந்த வாக்குவாதம்.. மவுனம் கலைத்த...

இதுனால தான் கோலி கூட சண்டை போட்டேன்.. ஐபிஎல் தொடரில் நடந்த வாக்குவாதம்.. மவுனம் கலைத்த கவுதம் கம்பீர்..

- Advertisement 1-

கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றி அசத்தியிருந்தது. குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதி இருந்த இறுதிப் போட்டி, கடைசி பந்து வரை மிகவும் விறுவிறுப்பாக சென்றதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் இந்த போட்டியை கண்டு களித்தனர். கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சென்னை அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற உதவினார் ஜடேஜா.

இறுதி போட்டி தவிர, 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இன்னும் நிறைய விஷயங்கள் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றிருந்தது. அதில் ஒரு பக்கம் சுவாரஸ்யமான சம்பவம் இருந்தாலும், இன்னொரு பக்கம் சர்ச்சையை உண்டு பண்ணிய சம்பவங்களும் அதிகம் அரங்கேறி இருந்தது. அந்த வகையில் மிகவும் முக்கியமான ஒன்று தான் கோலி – நவீன் உல் ஹக் மோதல்.

பெங்களூர் மற்றும் லக்னோ அணிகள் மோதி இருந்த போட்டிக்கு நடுவே, இந்திய வீரர் சிராஜ் மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் ஆகியோர் இடையே சிறிதாக வாக்குவாதம் உருவானதாக தெரிகிறது. இதனை அறிந்ததும் தனது அணி வீரர் சிராஜுக்காக கோலி உள்ளே வந்தார். என்ன பிரச்சனை என்ற தொனியில் அவர் நவீனை சீண்ட, இந்த விஷயம் இன்னும் பரபரப்பானது.

தொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் வீரரும் அப்போதும் லக்னோ அணியின் ஆலோசகராகவும் இருந்த கவுதம் கம்பீர், நவீனுக்காக களத்தில் குதிக்க அங்கே கோலி மற்றும் கம்பீர் ஆகியோர் மாறி மாறி ஆக்ரோஷத்தில் வாக்குகளை பரிமாறிக் கொண்டதை ரசிகர்கள் கவனித்தனர். இதனைத் தொடர்ந்து, நவீன் உல் ஹக் களமிறங்கிய போட்டிகளில் எல்லாம் ‘கோலி, கோலி’ என ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இந்த நிலையில், சமீபத்தில் நடந்த உலக கோப்பைத் தொடரில் கோலி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் நட்பு பாராட்டி, தங்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement 2-

இதனிடையே, அந்த சமயத்தில் கோலியுடன் வாக்குவாதம் செய்தது தொடர்பாக கவுதம் கம்பீர் தற்போது சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“ஒரு அணியின் ஆலோசகராக எனது அணி வீரர்களுக்கு ஒன்று என்றால் நான் ஆதரவாக இருக்க வேண்டும். போட்டி நடைபெறும் சமயத்தில் நான் உள்ளே சென்றிருந்தால் அது தவறு. போட்டி முடிந்த பிறகு அந்த வாக்குவாதம் தொடர்ந்ததால் தான் நான் உள்ளே போய் பேசினேன். எனது அணி வீரருடன் ஒருவர் வாக்குவாதம் செய்தால், நான் அங்கே நிச்சயம் நின்று என்னுடைய வீரருக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். ஒரு அணியின் ஆலோசகராக எனக்கு அதை செய்ய எல்லா உரிமையும் உள்ளது” என கம்பீர் தெரிவித்துள்ளார்.

சற்று முன்