- Advertisement -
Homeவிளையாட்டுதோனி தலைமையில் பாகிஸ்தானுக்கு எதிரா கம்பீர் செஞ்ச சாதனை.. 16 வருசமா ரோஹித், கோலியால் கூட...

தோனி தலைமையில் பாகிஸ்தானுக்கு எதிரா கம்பீர் செஞ்ச சாதனை.. 16 வருசமா ரோஹித், கோலியால் கூட நெருங்க முடியல..

- Advertisement-

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கௌதம் கம்பீர் தொடக்க வீரராக செய்த சாதனையை இன்னும் யாராலும் நெருங்க கூட முடியாமல் இருப்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம். 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் தோனி தலைமையில் இந்திய அணி களமிறங்கி இருந்தது. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக லீக் சுற்றில் மோதிய போட்டி டையாக, பின்னர் பவுல் அவுட் முறையில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் இறுதிப் போட்டியிலும் மோதி இருந்தது. அதிலும் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற, முதல் டி20 உலக கோப்பையை வென்று சாதனை புரிந்திருந்தது. அந்த சமயத்தில் இந்திய அணி டி 20 கோப்பை கைப்பற்றுவதற்கு கம்பீர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் முக்கிய காரணமாக இருந்தனர்.

அதிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் 150 ரன்களைக் கடக்க உதவி செய்திருந்த கௌதம் கம்பீர், 75 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். அதன் பின்னர் இந்திய அணி ஒரே ஒரு முறை இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தாலும் அவர்களால் டி 20 உலக கோப்பையை பின்னர் வெல்லவே முடியவில்லை.

ஆனால் இந்திய அணி இந்த முறை அதற்கான முயற்சிகளில் தயாராகி பல்வேறு மாற்றங்களையும் செய்து வருவதால் நிச்சயம் இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை மீண்டும் ஒருமுறை சொந்தமாகும் என்று தான் தெரிகிறது. ஆனால், அதே வேளையில் பேட்டிங்கில் கடுமையாக தடுமாறி வரும் இந்திய அணி அதனை சரி செய்ய வேண்டும் என்று நிலையும் உள்ளது.

- Advertisement-

அப்படி இருக்கையில் முதல் டி20 உலக கோப்பையில் தோனி தலைமையில் கம்பீர் செய்த சாதனையை இன்னும் யாரால் நெருங்க முடியாமல் இருப்பது பற்றி தற்போது பார்க்கலாம். பாகிஸ்தானுக்கு எதிராக டி 20 உலக கோப்பை போட்டியில் இதுவரை ஆடி உள்ள இந்திய அணியில் தொடக்க வீரராக கௌதம் கம்பீர் மட்டும் தான் அரைச் சதத்தை கடந்து 75 ரன்கள் எடுத்துள்ளார்.

2007 ஆம் ஆண்டிலேயே அரைச்சதத்தை அவர் கடந்திருந்த நிலையில் அடுத்த 16 ஆண்டுகளில் எந்த ஒரு இந்திய தொடக்க வீரரும் பாகிஸ்தானுக்கு எதிராக 50 ரன்கள் கடந்ததில்லை. அது மட்டுமில்லாமல் யாருமே 30 க்கும் மேற்பட்ட ரன்களை கூட தொடக்க வீரராக பாகிஸ்தானுக்கு எதிராக அடிக்காமல் இருப்பது தான் மிகப்பெரிய ஆச்சரியமாகவும், அதே வேளையில் இந்திய ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்