- Advertisement -
Homeவிளையாட்டுநோட் பண்ணிக்கோங்க, இது நடக்கும்.. ஐபிஎல் ஃபைனல் பத்தி தொடருக்கு முன்பே சரியாக கணித்த கம்பீர்..

நோட் பண்ணிக்கோங்க, இது நடக்கும்.. ஐபிஎல் ஃபைனல் பத்தி தொடருக்கு முன்பே சரியாக கணித்த கம்பீர்..

- Advertisement-

ஐபிஎல் தொடர் கண்ட சிறந்த கேப்டன்களில் ஒருவர் தான் கவுதம் கம்பீர். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஏழு ஆண்டுகள் ஆடிவந்த நிலையில், இரண்டு முறை அந்த அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய அணிகளுக்கு ஆலோசகராக இருந்து வந்த கம்பீர், அந்த அணியின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பங்கு வகித்திருந்தார்.

லக்னோ அணி புதிதாக 2022 ஆம் ஆண்டு உருவானபோது அந்த அணியின் ஆலோசராக நியமிக்கப்பட்ட கம்பீர், அந்த இரண்டு சீசன்களிலும் அந்த அணியை பிளே ஆப் முன்னேற வழி செய்திருந்தார். இதனை தொடர்ந்து மீண்டும் கொல்கத்தாவின் ஆலோசராக இந்த சீசனில் இணைந்திருந்த கௌதம் கம்பீரால் அந்த அணி அப்படியே மொத்தமாக மாறி போனது என தைரியமாக சொல்லலாம்.

ஷ்ரேயஸ் ஐயர் கேப்டன் பதவிக்கு திரும்பி வர, அந்த அணியில் கடந்த சில சீசனில் ஒர்க் அவுட் ஆகாத விஷயங்கள் அனைத்தும் தலைகீழாக இந்த முறை மாறி இருந்தது. கம்பீர் மீண்டும் அணியில் இணைந்ததால் சுனில் நரைன் தொடக்க வீரராக களமிறங்கி பட்டையைக் கிளப்பி வருகிறார். அவர் இதற்கு முன்பு நடந்த சீசன்களில் மிடில் ஆர்டரிலேயே ஆடிவந்த நிலையில், இந்த முறை மீண்டும் தொடக்க வீரராக மாறியது அவருக்கு மிகப்பெரிய உத்வேகத்தையும் கொடுத்திருந்தது.

இப்படி கொல்கத்தாவில் பல விஷயங்கள் கௌதம் கம்பீர் ஆலோசகரான பின் மாற, அவர்கள் மிக எளிதாக தற்போது இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளனர். ஐபிஎல் வரலாற்றிலேயே லீக் சுற்றில் அதிக ரன் ரேட் உள்ள அணியாக கொல்கத்தா இந்த முறை வரலாறு படைக்க, ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும் குவாலிஃபயர் 1 போட்டியில் வீழ்த்தியுள்ளது.

- Advertisement-

இதனால் சென்னையில் மார்ச் 26 ஆம் தேதி அன்று நடைபெறும் இறுதிப் போட்டிக்கும் முன்னேற்றம் கண்டுள்ள கொல்கத்தா அணி, மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த கொல்கத்தா, சென்னை அணிக்கு எதிராக தோல்வியை தழுவியதால் இந்த முறை கோப்பையை கைப்பற்றி அசத்துவார்கள் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில், ஐபிஎல் ஆரம்பமாவதற்கு முன் கம்பீர் பேசிய விஷயங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. “கொல்கத்தா அணியில் உள்ள அனைவருமே சமமாக தான் நடத்தப்படுவார்கள். இங்கே சீனியர், ஜூனியர், சர்வதேச வீரர், டொமஸ்டிக் வீரர் என எந்த பேச்சுக்கும் இடம் இருக்காது. எங்கள் அனைவரின் ஒரே மிசன் ஐபிஎல் கோப்பையை வெல்வது தான். இதனால், அனைவருக்கும் ஒரு எளிதான பாதையே உள்ளது. மே 26, நாங்கள் இறுதி போட்டியில் இருப்போம்” என கொல்கத்தா அணியின் கேம்பில் கம்பீர் பேசிய வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது.

சற்று முன்