கோலி ரன் அடிச்சிருக்கலாம்… ஆனா இவருக்கு தான் ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்கணும்.. கம்பீர் அதிரடி கருத்து..

- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்துளது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் விராட் கோலி 122 ரன்களும், கேஎல் ராகுல் 111 ரன்களும் விளாசினர். அதேபோல் இந்திய அணியின் டாப் 4 பேட்ஸ்ம்மேன்களும் அரைசதம் கடந்தனர்.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை ஒப்புக் கொண்டது. ஹாரிஸ் ராஃப் மற்றும் நசீம் ஷா இருவரும் காயம் காரணமாக பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

இதனால் ஆட்டநாயகனாக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. இறுதியாக சதம் விளாசியதோடு, சாதனைகளையும் படைத்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதற்கு கவுதம் கம்பீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆட்டம் முடிந்த பின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஆட்டநாயகன் விருது யாருக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற விவாதம் எழுந்தது.

இந்த விவாதத்தில் கவுதம் கம்பீர் பேசும் போது, பொதுவாக நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளால் ஸ்பின்னர்களை சிறப்பாக விளையாட முடியாது. ஆனால் ஆசிய அணிகளால் ஸ்பின்னர்களை சிறப்பாக முடியும். அதில் பாகிஸ்தான் போன்ற அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திறமை கொண்டவர்கள்.

- Advertisement -

இன்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் வெறும் 8 ஓவர்கள் மட்டும் வீசி 25 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதுதான் குல்தீப் யாதவின் திறமை. ஸ்பின்னர்களை சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்களுக்கு எதிராகவும் அவாரால் விக்கெட் வீழ்த்த முடிகிறது. விராட் கோலி, ராகுல் உள்ளிட்டோர் சதம் விளாசி இருந்தாலும், ஆட்டநாயகன் விருதுக்கு குல்தீப் யாதவ் தான் பொருத்தமானவர்.

அவரை கடந்து என்னால் வேறு யாரையும் பார்க்க முடியவில்லை. உலகக்கோப்பை தொடர் நெருங்கிவிட்டது. அதற்கேற்ப இந்திய அணியின் 3 பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை அனைத்து சூழல்நிலைகளிலும் விக்கெட் வீழ்த்தும் ஃபார்மில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்