- Advertisement 3-
Homeவிளையாட்டு11 வயசுல இந்தியாவுக்காக உலக கோப்பை ஜெயிக்க விரும்பிய கம்பீர்.. வாழ்க்கையிலயே அவர் நிறைய அழுதது...

11 வயசுல இந்தியாவுக்காக உலக கோப்பை ஜெயிக்க விரும்பிய கம்பீர்.. வாழ்க்கையிலயே அவர் நிறைய அழுதது அப்ப தான்..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு டி20 உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது போல ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தது. இதற்கு மிக முக்கியமான காரணமாக விளங்கியவர் தான் அந்த அணியின் ஆலோசராக இருந்த முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.

இளம் வீரர், சீனியர் வீரர் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் ஒன்றாக பார்த்த கம்பீர் கடைசி ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே கோப்பை வெல்வது தான் இலக்கு என்றும் கூறி அதனை நிறைவேற்றவும் செய்திருந்தார். தற்போது ராகுல் டிராவிட் டி20 உலக கோப்பையுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து மாறி உள்ள நிலையில் அடுத்ததாக கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் ஒரு பழைய உலக கோப்பை போட்டி ஏற்படுத்திய தாக்கம் குறித்து கம்பீர் சொன்ன கருத்து ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. “ஒரு போட்டியை பார்த்த பின்னர் இந்தியாவுக்காக உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன். 1992 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக கோப்பை போட்டியில் மோதி இருந்தது.

அதில் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த போது இரவு முழுக்க நான் அழுது கொண்டே இருந்தேன். அதற்கு முன்பும், அதற்கு பின்பும் இதுவரை நான் அப்படி அழுததே கிடையாது. ஏன் என்ற காரணமும் எனக்கு தெரியாது.

- Advertisement 2-

அந்த சமயத்தில் எனக்கு 11 வயது தான். இரவு முழுதும் அழுது கொண்டிருந்த நான் இந்தியாவுக்காக உலகக் கோப்பயை வெல்ல வேண்டும் என விரும்புவதாக கூறிக் கொண்டே இருந்தேன். 1992 ஆம் ஆண்டு அழுது 2011 ஆம் ஆண்டு என் கனவையும் நிறைவேற்றி இருந்தேன். அந்த போட்டியில் வெங்கடாபதி ராஜு ரன் அவுட் ஆகியதால் ஒரு ரன்னில் இந்தியா தோற்றது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

இந்திய நேரப்படி அதிகாலையிலேயே அந்த போட்டி நடந்ததால் காலை 5:00 மணிக்கு எழுந்து போட்டியை பார்த்து கொண்டிருந்தேன். ஆனால் அந்த போட்டிக்கு முன்பும், பின்பும் அதனைப் போல் அந்த சமயத்தில் இருந்த சோகத்தில் நான் இருந்ததே இல்லை” என கம்பீர் கூறியுள்ளார். அவர் குறிப்பிட்டது போலவே 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2011 ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக விளங்கி இருந்ததும் கம்பீரின் பேட்டிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்