- Advertisement 3-
Homeவிளையாட்டுஅப்போ கம்பீர் பயிற்சியாளர் இல்லையா.. அவரது வாயில் இருந்தே விழுந்த வார்த்தை.. இந்திய கிரிக்கெட்டில் நடக்க...

அப்போ கம்பீர் பயிற்சியாளர் இல்லையா.. அவரது வாயில் இருந்தே விழுந்த வார்த்தை.. இந்திய கிரிக்கெட்டில் நடக்க போகும் ட்விஸ்ட்..

- Advertisement 1-

ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு, மொத்தம் 20 சர்வதேச அணிகள், டி 20 உலக கோப்பைத் தொடருக்காகவும் தயாராகி வருகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் மிகப்பெரிய யுத்தம் தொடங்க போகும் நிலையில், தொடர்ந்து ஐசிசி இறுதி போட்டிகளில் கடந்த ஆண்டில் வெற்றி நடை போட்டிருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அதனை டி 20 உலக கோப்பையில் தொடரும் நோக்கில் தயாராகி வருகின்றனர்.

இன்னொரு பக்கம், கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் உலக கோப்பை என இரண்டிலும் இறுதி போட்டியில் தோல்வி அடைந்திருந்த இந்திய கிரிக்கெட் அணி, கடந்த சில ஆண்டுகளாகவே எந்த ஐசிசி கோப்பையை வெல்லாமல் இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஷயத்தில் தீவிரம் காட்டும் என்றே தெரிகிறது.

ஆஸ்திரேலியா, இந்தியா போல மற்ற அணிகளும் டி 20 உலக கோப்பையைத் தட்டி தூக்க ஆயத்தமாகி வருகின்றனர். இதனிடையே, டி 20 உலக கோப்பைத் தொடரை போல இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் மற்றொரு விஷயம் தான், இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்பது பற்றியது.

ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் ஒரு முன்னாள் இந்திய வீரர் தான் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட போகிறார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. அப்படி இருக்கையில், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து அவர்கள் ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த கவுதம் கம்பீர், இந்திய அணியின் பயிற்சியாளராக அறிவிக்கப்பட போகிறார் என்றும் தகவல் வெளியாகி வருகிறது.

- Advertisement 2-

கம்பீர் இந்திய அணியில் இணைந்தால் நிச்சயம் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கும் நிலையில், அவர் பயிற்சியாளராக மாற மாட்டார் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. ஐபிஎல் வென்ற வேகத்தில் பேசி இருந்த கம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஐபிஎல் தொடரில் தலைசிறந்த அணியாக மாற்றுவேன் என்றும், அதற்காக சென்னை, மும்பையை விட அதிக கோப்பையை வெல்வதற்காக அவர்களை தயார் செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஒருவரால் ஐபிஎல் உள்ளிட்ட எந்த தொடரிலும் பயிற்சியாளராகவோ அல்லது நிர்வாகத்தில் ஒருவராகவோ இருக்க முடியாது. கம்பீர் சொன்ன கருத்தின் படி, வருங்கால கொல்கத்தா அணியை சிறப்பாக தயார் செய்ய அவர் முயற்சிக்கிறார் என்றால், நிச்சயம் இந்திய அணியின் பயிற்சியாளராக அவர் மாறும் வாய்ப்பு குறைவு என்றே பலரும் தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்