- Advertisement -
Homeவிளையாட்டுஇந்திய அணிக்கு பயிற்சியாளராக தோனி? கவாஸ்கர் சொன்ன சூப்பர் பிளான் - அட இது நல்லா...

இந்திய அணிக்கு பயிற்சியாளராக தோனி? கவாஸ்கர் சொன்ன சூப்பர் பிளான் – அட இது நல்லா இருக்கே!

- Advertisement-

இந்திய அணியின் மிக வெற்றிகரமான கேப்டன்களில் தோனி முதன்மையானவர். அவர் தலைமையில் இந்திய அணி மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அதன் பிறகு கோலி, ரோஹித் கேப்டன்சி செய்தும் இன்னும் கோப்பைகளைக் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டே சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து விலகிவிட்ட தோனி, இப்போது ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார்.

தற்போது 41 வயதாகும் தோனிக்கு இதுதான் கடைசி சீசனாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதை உறுதி செய்வது போல தோனி இன்னிங்ஸின் கடைசியில் மட்டுமே இறங்கி சில பந்துகளை மட்டுமே எதிர்கொள்கிறார். ஆனாலும் அவர் ஆட்டத்தில் குறை சொல்ல முடியாத படி பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக அபாரமாக விளையாடுகிறார்.

சில தினங்களுக்கு முன்னர் நடந்த ஐபிஎல் போட்டி ஒன்றில் தோனியிடம் பேசிய டேனி மோரிசன், தோனியிடம் “உங்களின் கடைசி ஐபிஎல் தொடரை விளையாடுவது எப்படி உள்ளது” எனக் கேட்க, அதற்கு சிரித்துக் கொண்டே தோனி “ஓ நீங்களாகவே முடிவு செய்து விட்டீர்கள் இதுதான் என்னுடைய கடைசி சீசன் என்று” எனக் கூற மைதானம் ஆர்ப்பரித்தது. அதனால் இப்போதைக்கு அவருக்கு ஓய்வு எண்ணம் இல்லை என்றும் தெரியவருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தோனி எதிர்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படவேண்டும் என்ற யோசனையைக் கூறியுள்ளார். அதில் தோனி எதிர்காலத்தில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வரவேண்டும். ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. ஏனென்றால் அவர் கிரிக்கெட்டில் இருந்தே இப்போதுதான் ஓய்வு பெறுகிறார். இன்னும் சில ஆண்டுகள் ஓய்வெடுத்துக்கொண்டு பின்னர் அந்த பொறுப்புக்கு வரலாம்.

- Advertisement-

பயிற்சியாளர் என்ற பெரிய பொறுப்புக்கு அவர் தன்னை தயார்படுத்திக் கொண்டு வரலாம். இப்போதே அவர் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அவரோடு விளையாடிய வீரர்கள் பற்றிய முடிவை எடுக்க வேண்டிவரும். என கவாஸ்கர் கூறியுள்ளார். கவாஸ்கரின் இந்த கருத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான ஒன்றாக அமைந்துள்ளது.

சற்று முன்