- Advertisement -
Homeவிளையாட்டுஇதென்ன ஜுஜிபி அபராதம், மீண்டும் நடக்காம இருக்க கோலிக்கு இந்த தண்டனை கொடுங்க - கவாஸ்கர்...

இதென்ன ஜுஜிபி அபராதம், மீண்டும் நடக்காம இருக்க கோலிக்கு இந்த தண்டனை கொடுங்க – கவாஸ்கர் ஆவேசம்!

- Advertisement-

நேற்று முன் தினம் லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு கம்பீர் மற்றும் கோலி இருவரும் கடுமையான மோதலின் தாக்கம் இன்னும் கிரிக்கெட் உலகில் ஓயவில்லை. இருவருக்கும் போட்டி சம்பளம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதெல்லாம் மிகவும் சிறிய தண்டனை என முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் சலிப்பாக பேசியுள்ளார்.

இது சம்மந்தமாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர் “கொஞ்ச நேரத்துக்கு முன்னர்தான் அந்த விஷுவல்களைப் பார்த்தேன், நேற்றைய போட்டியை நேரலையில பார்க்கவில்லை.. இந்த விஷயங்கள் எப்பவுமே நல்லது கிடையாது. 100 சதவீதம் அபராதம் என்ன? கோலிக்கு ஒரு சீசன் விளையாட  ₹17 கோடி…  அதாவது அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் உட்பட 16 போட்டிகளுக்கு ₹17 கோடி. அப்படியென்றால் நீங்கள் ஒரு கோடி ரூபாய் என்று சொல்கிறீர்கள். அவருக்கு ₹1 கோடி அபராதம் விதிக்கப்படுமா? அதெல்லாம் மிகவும் குறைவாக தொகைதான்.” எனக் கூறியுள்ளார்.

மேலும் அதிக தண்டனை வழங்கவேண்டுமென கூறும் அவர் “கம்பீரின் சம்பளம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. இது மீண்டும் நடக்காமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இது ஒரு சிறிய அபராதம், இவ்வளவு கம்மியான தண்டனையால் இது போல மீண்டும் நடக்காது என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் அக்ரஷனுடன் விளையாட விரும்புகிறீர்கள். நாங்கள் விளையாடிய காலத்தில் கொஞ்சம் வேடிக்கை இருந்தது. ஆனால் இப்போது பார்க்கும் இந்த ஆக்ரோஷம் எதுவும் இல்லை. எல்லாமே டிவியில் வருவதனாலும் இதெல்லாம் நடக்கிறது.” என தெரிவித்துள்ளார்.

கோலிக்கும் கம்பீருக்கும் சில போட்டிகளிலாவது தடை விதிக்க வேண்டுமென கூறியுள்ள அவர் “எனவே, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் ஏதாவது செய்யவேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹர்பஜன் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோருக்கு விதித்தது போல ஓரிரு போட்டிகள் இருவருக்கும் விளையாட தடை விதியுங்கள். இந்த விஷயங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் அது கடினமான ஒன்று” என்று  தெரிவித்துள்ளார்.

- Advertisement-

சற்று முன்