- Advertisement -
Homeவிளையாட்டுஇந்தியாவ தோக்கடிக்க இதான் வழி.. ஸ்மித்தை வைத்து காய் நகர்த்தும் ஆஸி.. ரோஹித் - கம்பீருக்கு...

இந்தியாவ தோக்கடிக்க இதான் வழி.. ஸ்மித்தை வைத்து காய் நகர்த்தும் ஆஸி.. ரோஹித் – கம்பீருக்கு உருவான சிக்கல்..

- Advertisement-

இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி புதிதாக ஒரு திட்டம் போட்டு வரும் நிலையில், நிச்சயம் அவர்களுக்கு அது கை கொடுக்கும் என்றே தெரிகிறது. இந்த ஆண்டின் மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் தொடராக பலர் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வரும் தொடர் தான் பார்டர் கவாஸ்கர் டிராபி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த தொடர், ஆஷஸ் தொடருக்கு நிகராக உள்ளதாகவும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு காரணம் ஆஸ்திரேலிய மண்ணில் அவர்களை பலரும் டெஸ்டில் வீழ்த்த முடியாமல் திணறி வரும் நிலையில் இந்திய அணி இரண்டு முறை தொடர்ச்சியாக பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் வீழ்த்தி இருந்தது தான்.

இதனால் மூன்றாவது முறையாக அவர்கள் மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவார்களா? அல்லது ஆஸ்திரேலியா அணி இரண்டு தடவைக்கும் சேர்த்து பதிலடி கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கு மத்தியில் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் ஆடி வந்தார்.

நான்காவது இடத்தில் ஆடி வந்த அவர் ஒரு முயற்சியாக தொடக்க வீரராக களமிறங்கி பார்க்க அது அவருக்கு பலனை கொடுக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்த ஸ்டீவ் ஸ்மித், 171 ரன்கள் மட்டும் தான் சேர்த்திருந்தார். அப்படி ஒரு சூழலில் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் மீண்டும் தனது பழைய நான்காவது இடத்திலேயே ஸ்மித் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

- Advertisement-

இது பற்றி ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி பேசுகையில், “பேட் கம்மினிஸ் மற்றும் ஆண்ட்ரூ மேக்டொனால்டு ஆகியோருடனான உரையாடலில் தான் மீண்டும் பேட்டிங் ஆர்டரில் கீழே ஆட வேண்டும் என ஸ்மித் விருப்பம் தெரிவித்துள்ளார். தொடக்க வீரர் இடம் மற்றும் நான்காவது வீரரிடம் இன்னும் நிரப்ப வேண்டியுள்ளது.

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கு இன்னும் நான்கு வாரங்கள் இருப்பதால் யார் எந்த இடத்தில் ஆடுவார்கள் என்பது பற்றி முடிவு எடுக்கவும் எங்களுக்கு நேரம் அதிகமாக உள்ளது” என ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார். ஸ்மித் 4 வது வீரராக தான் வருவாரா என்பதை பெய்லி உறுதியாக சொல்லவில்லை. ஆனால், இதுவரை தொடக்க வீரராக ஆடி வந்த ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் ஆர்டரில் கீழே ஆட விருப்பம் தெரிவித்ததன் படி, ஒரு வேளை 4 வது வீரராக வந்தால் நிச்சயம் அது இந்திய அணிக்கு நெருக்கடியை உருவாக்கும் என்றே தெரிகிறது.

சற்று முன்