- Advertisement -
Homeகிரிக்கெட்பணத்துக்காகலாம் என்னால ஐபிஎல்-ல விளையாட முடியாது. எனக்குன்னு ஒரு லட்சியம் இருக்கு. ஆஸ்திரேலிய அணிக்காக இத...

பணத்துக்காகலாம் என்னால ஐபிஎல்-ல விளையாட முடியாது. எனக்குன்னு ஒரு லட்சியம் இருக்கு. ஆஸ்திரேலிய அணிக்காக இத தான் நான் செய்ய விரும்பறன் – மிட்சல் ஸ்டார்க் அதிரடி பேச்சு

-Advertisement-

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் கடந்த 2010 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 77 டெஸ்ட் போட்டிகள், 110 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகள் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார். மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் இவரை வாங்க பல ஐபிஎல் அணிகள் ஏலத்தில் போட்டி போட தயாராக இருக்கின்றனர்.

இருப்பினும் இவர் கடந்த 2014 மற்றும் 2015 ஆகிய இரண்டு சீசனங்களில் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடினார். அதனை தொடர்ந்து கடந்த எட்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை தவிர்த்து வருகிறார். 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர் 27 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரை கொல்கத்தா அணி 9.4 கோடிகளுக்கு ஏலத்தில் எடுத்தது. இருப்பினும் ஸ்டார்க் அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்நிலையில் இப்படி தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரை தவிர்த்து வருவதற்கு காரணம் என்ன? என்பது குறித்து பேசியுள்ள மிட்சல் ஸ்டார்க் கூறுகையில் : ஐபிஎல் தொடரின் மூலம் பணம் கிடைப்பது ஒரு நல்ல மகிழ்ச்சியான விடயம் தான்.

ஆனாலும் அதைவிட எனக்கு ஆஸ்திரேலியா அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது. அதன் காரணமாகவே நான் ஐபிஎல் தொடரை தவிர்த்து வருகிறேன். ஆஸ்திரேலியா அணிக்காக நீண்ட காலம் விளையாட நான் என்னென்ன செய்ய முடியுமோ அதனை செய்து வருகிறேன். அந்த வகையில் ஐபிஎல் மூலம் கிடைக்கும் பணத்தைவிட நான் ஆஸ்திரேலிய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது எனக்கு மேலோங்கிய எண்ணமாக உள்ளது என ஸ்டார்க் கூறியுள்ளார்.

-Advertisement-

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தற்போது நான் ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமாகி 10 ஆண்டுகளை கடந்து விட்டது. அதோடு மூன்று வகையான கிரிக்கெட்டிலும் நான் விளையாடி வருவதால் இந்த பயணம் என்பது எளிதானது கிடையாது. எனவே சரியான திட்டமிடலுடன் விளையாடி வருகிறேன். மேலும் இன்னும் கூடிய சீக்கிரத்தில் என்னுடைய பந்துவீச்சின் வேகமும் குறையும்.

இதையும் படிக்கலாமே: டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தட்டி தூக்க இந்த ப்ளேயர்ஸ்தான் பக்காவா செட் ஆவாங்க – சூப்பரான தனது பிளேயிங் லெவனை வெளியிட்ட சுனில் கவாஸ்கர்

அதேபோன்று என்னுடைய இடத்தை நிரப்ப இன்னொரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் விரைவில் வருவார் என்று தெரியும். எனவே நான் தற்போதைக்கு என்னுடைய சர்வதேச கிரிக்கெட் கரியரில் ஃபோகஸ் செய்து வருகிறேன். நிச்சயம் எனக்கு ஆஸ்திரேலிய அணிக்காக 100 டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே ஆசை என மிட்சல் ஸ்டார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்