- Advertisement -
Homeவிளையாட்டுவரட்டா.... பேட்டை ஓரமா வைக்க வேண்டிய நேரம் வந்துடுச்சி... மேக்ஸ்வெல் போட்ட பதிவு... அவர் மனைவி...

வரட்டா…. பேட்டை ஓரமா வைக்க வேண்டிய நேரம் வந்துடுச்சி… மேக்ஸ்வெல் போட்ட பதிவு… அவர் மனைவி கொடுத்த ரிப்ளை…

- Advertisement-

உலக கோப்பையை வென்ற கையுடன் இந்தியாவிலே சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் ஆடி வருகிறது. விராட் கோலி, ரோஹித் ஷர்மா, முகமது ஷமி, பும்ரா உட்பட உலக கோப்பைத் தொடரில் ஆடிய பல இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள சூழலில், இந்திய அணியை டி 20 தொடரில் சூர்யகுமார் யாதவ் வழிநடத்தி வருகிறார். மேலும் ருத்துராஜ், ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா உள்ளிட்ட பல இளம் வீரர்களுக்கும் இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்து முடிந்த 3 டி 20 போட்டிகளின் முடிவில், இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதிலும் குறிப்பாக, நேற்று (28.11.2023) நடந்து முடிந்த 3 ஆவது டி 20 போட்டி கடைசி வரை பட்டாசாக வெடித்தது என்று தான் சொல்ல வேண்டும். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தது.

ஜெய்ஸ்வால் 6 ரன்களிலும், இஷான் கிஷன் ரன் எடுக்காமல் அவுட்டானாலும் தொடக்க வீரரான ருத்துராஜ், அசத்தலாக ஆடி ரன் சேர்த்தார். கடைசி வரை களத்தில் நின்ற அவர், 57 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 123 ரன்கள் எடுத்திருந்தார். அதிலும் மேக்ஸ்வெல் வீசிய கடைசி ஓவரில் 30 ரன்களை அவர் சேர்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் வானவேடிக்கை காட்டினார் மேக்ஸ்வெல்.

கடைசி 2 ஓவர்களில் 43 ரன்கள் தேவைப்பட, பவுண்டரிகளை பறக்க விட்ட மேக்ஸ்வெல், சதமடித்து கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்க உதவினார். சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் கூட, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, தனியாளாக போராடிய மேக்ஸ்வெல், 200 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறவும் வழிவகுத்தார்.

- Advertisement-

இப்படி அடுத்தடுத்து மிரட்டலான இன்னிங்ஸ் ஆடி வரும் மேக்ஸ்வெல், இந்திய அணிக்கு எதிராக கடைசி இரண்டு டி 20 போட்டிகளில் கலந்து கொள்ளாமல் ஆஸ்திரேலியாவுக்கு திரும்புகிறார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட மேக்ஸ்வெல், “சொந்த ஊர் திரும்பும் நேரம் வந்து விட்டது. தேங்க் யூ இந்தியா, இது ஒரு மறக்க முடியாத பயணம்” என உணர்ச்சி பொங்க குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவில் கமெண்ட் செய்த மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன், “கிரிக்கெட்டில் இருந்து குழந்தையை பார்த்துக் கொள்வதற்கு மாறும் நேரம் இது(Time to swap the 🏏 for a 🍼, cheers)” என ஜாலியாக குறிப்பிட்டிருந்தார். மேக்ஸ்வெல் – வினி ராமன் தம்பதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, உலக கோப்பை தொடர் முதல் இந்தியாவிலேயே இருந்த மேக்ஸ்வெல், 3 டி20 போட்டிகள் ஆடி முடித்து விட்டு ஆஸ்திரேலியா திரும்புகிறார்.

கிரிக்கெட் போட்டிகள் முடிந்த சூழலில், இனி குழந்தையை பார்த்துக் கொள்ளும் நேரம் என்பதை மேக்ஸ்வெல் மனைவி வினி ராமன் அப்படி குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்