- Advertisement -
Homeவிளையாட்டுவீட்டிற்குள் நுழைந்த பாம்பு.. தில்லாய் களம் இறுக்கி கையிலேயே பாம்பை பிடித்த கிளென் மெக்ராத்.. கமெண்ட்ரி...

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு.. தில்லாய் களம் இறுக்கி கையிலேயே பாம்பை பிடித்த கிளென் மெக்ராத்.. கமெண்ட்ரி கொடுத்த மனைவி

- Advertisement-

கிரிக்கெட்டில் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத்தும் ஒருவர். ஒருகால கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்த இவரது பங்களிப்பு அளப்பறியது. குறிப்பாக 1999, 2003, 2007 என ஆஸ்திரேலியா ஹாட்ரிக் உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

பார்ப்பதற்கு எளிமையான பவுலிங் ஆக்ஷ்ன் என்றாலும் லைன் அண்ட் லெங்க்த்தில் துல்லியமாக பந்துவீசி விக்கெட்டுகள் எடுப்பது தான் இவரது ஸ்டைல். சச்சின், லாரா என பல முன்னணி பேட்டர்களை திணறடித்துவர். ஆட்டத்தில் எப்பேற்பட்ட சூழ்நிலையையும் மிக அசால்ட்டாக டீல் செய்பவர். 2007 உலகககோப்பைக்கு பின் ஓய்வுக்கு பெற்ற இவர், தொடர்ந்து கமெண்ட்ரியில் ஈடுபட்டுவருகிறார்.

இந்த நிலையில், பாம்புகள் அவரது வீட்டிற்குள் புகுந்துள்ளன. அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று பாம்புகள். இதை கண்ட அவரது மனைவி பயத்தில் கத்தினார். ஆனால் மெக்ராத்தோ களத்தில் எப்படி அமைதியாக இருந்து காரியத்தை சாதிப்பாரோ அதேபோல செயல்பட்டு பாம்புகளை மிக அசால்ட்டாக வெளியேற்றினார்.

துடப்பத்தின் உதவியோடு பாம்பின் வால்-ஐ பிடித்து அவரை பாம்பை வீட்டிலிருந்து வெளியேற்றினார். தான் பாம்பு பிடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில், மனைவி சாரா லியோனார்டியின் ஊக்கமும் ஆதரவிற்கும் பிறகு வீட்டில் இருந்த 3 கரையோர கம்பள மலைப்பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து வீட்டில் இருந்து வெளியேற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement-

தனது வீர தீர செயலால் மெக்ராத் பாம்பு கடியிலிருந்து நூலிழையில் உயிர் தப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் இவரது இந்த செயலை பாராட்டிவருகின்றனர். குறிப்பாக, ஷெல்ஃப்க்கும் பாம்புக்கும் இடையே நல்ல லைன் அண்ட் லெங்கத்தை வைத்துள்ளீர்கள் என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். மற்றோருவரோ, பைத்தான் vs பிஜியான் என குறிப்பிட்டிருந்தார். பிஜியான் என்பது மெக்ராத்தின் செல்ல பெயர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக மெக்ராத் இதுவரை 124 டெஸ்ட் போட்டிகளில் 524 விக்கெட்டுகளும், 250 ஒருநாள் போட்டிகளில் 381 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தனது கடைசி பந்துகளில் விக்கெட் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்