முன்னாள் இந்திய கிரிக்கெட் இடது கை ஓபனிங் பேட்ஸ்மனும் பா.ஜ.க எம்.பியுமான கவுதம் கம்பீர் அவ்வபோது சில கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார். அந்த வகையில் சமீபத்தில் இந்திய அணி தேர்வு குறித்து அவர் பேசி உள்ளார் ஒரு விடயம் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளரும், தற்போது வர்ணையாளராக இருக்கும் ரவி சாஸ்திரி சமீபத்தில் இடது கை வீரர்கள் குறித்து கூறிய யோசனையை முற்றிலுமாக நிராகரிக்கும் வண்ணம் கம்பீர் தனது கருத்துக்களை கூறி உள்ளார். இந்த கருத்து தற்போது விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.
சமீபத்திய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ரவி சாஸ்திரி, 4 இடது கை ஆடக்கரார்களையாவது அணியில் கட்டயாமாக சேர்க்க வேண்டும் என கூறி இருந்தார். இடது கை ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா செயல்படுவார். மேலும் 3 இடது கை பேட்ஸ்மன்களின் இடத்தை தகுந்த வீரர்களை தேர்வு செய்து நிரப்ப வேண்டும்.
ஜாய்ஸ்வல் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவரை தேர்வு செய்யலாம். அதே போல இஷான் கிஷன் இடது கை பேட்ஸ்மனாகவும் , சிறந்த விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார். அதனால் அவரை கூட பரிசீலனையில் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி இருந்தார் ரவி சாஸ்திரி.
இந்த நிலையில், இடது கை வீரர்கள் குறித்து கம்பீர் கூறுகையில், நாம் ஒரு வீரரை இடது கை ஆட்டக்காரர் , வலது கை ஆட்டக்காரர் என பிரித்து பார்க்க கூடாது. வீரர்களின் ஃபார்ம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே வீரர்களின் தேர்வு இருக்க வேண்டும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு ஆட்டக்காரர் இடது கை பேட்ஸ்மேன் அல்லது வலது கை பேட்ஸ்மேன் என பிரித்து பார்க்கக் கூடாது .
ராகுல் சிறப்பாக ஆடினால் அவரை சேர்க்கலாம், ஸ்ரேயாஸ் சிறப்பாக ஆடினால் அவரை தேர்வு செய்யலாம். இந்த முறையே சிறந்தது. அதே நிலை தான் யாஷாஸ்வி ஜாய்ஸ்வாலுக்கும். எப்பொழுதும் வீரர்களின் ஃபார்மையும் தரத்தையுமே பரிசீலிக்க வேண்டும் , அவர்களின் க்வாண்டிடியை கருத கூடாது என கம்பீர் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் ரவிசாஸ்திரியின் கருத்தை முற்றிலும் நிராகரித்துள்ளார் என்பது தெளிவிற்காக தெரிகிறது.