ஐ.பி.எல் பைனல் நெருங்கிவிட்டது. நேற்றைய போட்டியில் குஜராத் அணி மும்பை அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் குஜராத் ஆகிய இரு அணிகளுக்கு இடையே தான் பைனல் நிகழ உள்ளது என்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் பைனலில் யார் வெல்லுவார்கள் என்ற கேள்வி பலரது மனத்திலும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர், CSK Vs GT பைனலில் எந்த அணி வெல்லும், ஜாதக ரீதியாக இரு அணி கேப்டன்களின் சாதக பாதகங்கள் என்ன போன்ற தகவல்களை கூறி உள்ளார். அவர் இது பற்றி கூறுகையில், தோனியை பொறுத்தவரை அவருக்கு கன்னி ராசி உத்திர நடச்சத்திரம். ஹர்திக் பாண்டியா கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம்.
கன்னி ராசிகாரர்கள் எப்போதும் சற்று நிதானமாக யோசித்து செயல்படுவார்கள், அதே சமயம் ஆயில்யம் நட்சத்திரகாரர்கள் பொதுவாகவே தீயாக இருப்பார்கள். இந்த குணங்களை, தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் களத்தில் இருக்கும்போது நாம் கண்டிருப்போம். தோனியை பொறுத்தவரை கன்னி ராசிக்கு சனி கோச்சாரத்தில் 6ல் சென்றுகொண்டிருக்கிறார். ஆனால் ஹர்திக் பாண்டியாவிற்கு அஷ்டம சனி. இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா தோனியோடு ஒப்பிடுகையில் சற்று சாறுகளாக உள்ளார்.
தோனிக்கு தற்போது குரு திசையில் சனி புத்தி நடைமுறையில் உள்ளது. ஆனால் ஹர்திக் பாண்டியா சுக்கிர திசையின் நடு பகுதியில் உள்ளார். இருப்பினும் தோனியின் தற்போதையை கிரக நிலைபடி அவருக்கு அதிகப்படியான வெற்றி வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் சி.எஸ்.கே தான் கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்புள்ளது.
அதே சமயம் சி.எஸ்.கே அணியில் இடம்பெற்றுள்ள பிற நாட்டு வீரர்கள் பைனலில் ஜொலிப்பார்கள். பதிரனா, டேவன் கான்வே போன்றோரின் ஆட்டம் சிறப்பாக இருக்கும். அதே போல மெயின் அலியும் கை கொடுக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறி உள்ளார்.
அதே சமயம் தோனி, அடுத்த வருடம் ஐ.பி.எல் போட்டியில் விளையாடுவார். ஆனால் அதற்க்கு அடுத்த வருடம் முதல் அவர் முழுமையாக வேறு துறைக்கு செல்ல வாய்ப்புகள் உண்டு. அவர் கோச் போன்ற பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்று கணித்துள்ளார் அந்த ஜோதிடர். இவை எல்லாம் நடக்குமா அல்லது இதில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.