- Advertisement -
Homeவிளையாட்டுசுப்மன் கில்ல கோலியோட கம்பேர் பண்றதா? சுப்மன் கில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள்ல ஒருத்தர். அவரோட...

சுப்மன் கில்ல கோலியோட கம்பேர் பண்றதா? சுப்மன் கில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள்ல ஒருத்தர். அவரோட ஆட்டம் இனி செமையா இருக்கும்னு நம்பிக்கை இருக்கு – குஜராத் அணியின் கோச் கேரி கிரிஸ்டன் பேச்சு

- Advertisement-

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணியின் துவக்க வீரராக விளையாடிய சுப்மன் கில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது கரியரின் உச்சகட்ட பார்மில் இருப்பதை நிரூபித்துள்ளார். ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் 17 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மூன்று சதம் உட்பட 890 ரன்கள் குவித்து இந்த வருடம் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அதோடு ஒரு சீசனில் விராட் கோலி அடித்த அதிகபட்ச ரன்களான 973-க்கு அடுத்து இவரே ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் இருக்கிறார். இந்த ஆண்டு குஜராத் அணி பெற்ற வெற்றிகளுக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படும் சுப்மன் கில் அந்த அணியை இறுதி போட்டி வரை அற்புதமாக கொண்டு சென்றார். ஐபிஎல் தொடர் மட்டுமின்றி இந்திய அணிக்காகவும் அண்மையில் அறிமுகமாகி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இப்படி அவரது சிறப்பான செயல்பாடுகள் காரணமாக சுப்மன் கில் தான் இந்திய அணியின் எதிர்கால சூப்பர் ஸ்டார் என்று தற்போதே பலரும் புகழ ஆரம்பித்து விட்டனர். மேலும் சச்சின், விராட் கோலி வரிசையில் இவரும் வருவார் என்று பலராலும் பேசப்பட்டு வரும் வேளையில் சுப்மன் கில் இளம் வீரர் தான் இப்போதே அவரை சச்சின் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருடனும் ஒப்பிடுவது தவறு என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், குஜராத் அணியின் இந்நாள் பயிற்சியாளருமான கேரி கிரிஸ்டன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்:

சுப்மன் கில் ஒரு இளமையான வீரர், அவரிடம் நம்ப முடியாத அளவு திறமையும் அதற்கான உழைப்பும் இருக்கிறது. தற்போதைய உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் அவரும் ஒருவர் ஆனால் அவரை இப்போதே சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோருடன் ஒப்பிடுவது தவறு ஏனெனில் அவர் தற்போது தனது கரியரின் ஆரம்ப காலகட்டத்தில் இருக்கிறார்.

- Advertisement-

சுப்மன் கில் மிகச்சிறப்பான வீரர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இதே செயல்பாட்டை அவர் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும். நிச்சயம் அவர் இனிவரும் காலங்களிலும் இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் தற்போது அவர் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே: இந்திய அணில திறமைசாலி பலர் இருந்தாலும் அவங்களோட மனநிலையில பிரச்சனை இருக்கு. இத அவங்க மாத்திக்காம இருந்தா கப் அடிக்கறதெல்லாம் கஷ்டம் தான் – மேத்யு ஹெய்டன் கருத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் அவர் முக்கிய வீரராக இருப்பார். இருப்பினும் இனிவரும் காலங்களில் அவருக்கு வரும் தடைகளையும், சவால்களையும் அவர் எவ்வாறு கையாளப்போகிறார் என்பதை பார்க்க வேண்டும். அவரது பயணம் இன்னும் நீண்ட தூரமானது அதற்குள்ளாகவே நாம் அவரை சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோருடன் ஒப்பிடக்கூடாது என கேரி கிறிஸ்டன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்